மகிழ்ச்சி செய்தி.... CM பதவியேற்றதும் விஜய் போடும் முதல் கையெழுத்து..... ஆரம்பவே அமர்களமாகும் அரசியல்!!!
தமிழகத்தில் தவெக வெற்றிக்குப் பிறகு விஜய் மே இறுதிக்குள் முதலமைச்சராகப் பதவியேற்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு ₹2,500 திட்டம் முதல் நடவடிக்கையாக வரலாம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றி பெற்றுள்ளது. கட்சித் தலைவர் விஜய் மே மாத இறுதிக்குள் முதலமைச்சராகப் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. புதிய அரசு அமைப்புக்கான நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பெண்கள் திட்டம்: முதல் கையெழுத்தா?
தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களுக்கு மாதம் ₹2,500 வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். இதையடுத்து, புதிய அரசு அமைந்ததும் அந்த திட்டத்திற்கான கோப்பில் முதலாவது கையெழுத்து இடப்படலாம் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: மகிழ்ச்சி பொங்கும் இன்பச் செய்தி! மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500......! பெண்களின் வாக்குகளே வெற்றியின் சாவி! முதல்வர் ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை!
முந்தைய திட்டங்கள் தொடருமா?
முன்னாள் ஆட்சியில் வழங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து தெளிவான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தகவலின்படி, புதிய திட்டம் அமலுக்கு வந்தால் பழைய திட்டங்களில் மாற்றம் இருக்கலாம் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் பலர் அடுத்த கட்ட அறிவிப்பை எதிர்பார்த்து உள்ளனர்.
புதிய ஆட்சியின் கவனம் எதில்?
₹2,500 பெண்கள் திட்டம் நடைமுறைக்கு வந்தால், குடும்பங்களின் தினசரி செலவுக்கு உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தேர்தல் வெற்றிக்கு பின் மக்கள் நல திட்டங்களை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறது என்பது அரசின் முதல் சோதனையாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து, புதிய அரசின் ஆரம்ப முடிவுகள் தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.