×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்..! கோட்டையில் நடக்கும் கோஷ்டி மோதல்..? CM விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!!!

விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் மின்வெட்டு, சிறை பாதுகாப்பு குளறுபடிகள் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில், மின்சாரம் மற்றும் சிறைத்துறையை கவனித்து வரும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.. மாநிலம் முழுவதும் மின்வெட்டு பிரச்சினை, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கியதாக எழுந்த புகார் என அடுத்தடுத்து விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே சிறைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கேள்விகளும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

மின்வெட்டு விவகாரத்தால் அரசுக்கு நெருக்கடி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்களும் தொழில் துறையினரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனுடன், கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டும் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இடைத்தேர்தல் முடிந்த கையோடு அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! CM விஜய்யின் இறுதி முடிவு... 3 அமைச்சர்கள் பதவிக்கு ஆப்பு! அமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்..!!!

குறிப்பாக, துணை குடியரசுத் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றபோது மின்தடை ஏற்பட்ட விவகாரம் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேனி சிறை தப்பிப்பு சம்பவத்தால் பாதுகாப்பு கேள்வி

இதற்கிடையே, தேனி சிறையில் இருந்து விசாரணைக் கைதிகள் தப்பி சம்பவம் சிறைத்துறை நிர்வாகம் மீது விமர்சனங்களை எழுப்பியது. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் அரசைக் கடுமையாக விமர்சித்தன. இதையடுத்து, சிறைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டதுடன், உயர் அதிகாரிகள் சிலரும் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து சிறைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக எழும் புகார்கள், சிறைத்துறையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. இதனால் அமைச்சரின் துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளன.

கட்சிக்குள் கோஷ்டி மோதல்? விஜய் நடவடிக்கை என்ன?

மற்றொரு புறம், மதுரையை மையமாக வைத்து தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை அதிகரிக்க நிர்மல் குமார் முயற்சிப்பதாகவும், கட்சியில் புஸ்ஸி ஆனந்துக்கு மாற்றாகத் தனது ஆதரவாளர்களை முன்னிறுத்துவதாகவும் சில அமைச்சர்கள் தலைமைக்கு புகார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

மற்ற அமைச்சர்களின் பேச்சுகளைவிட, நிர்மல் குமார் கவனித்து வரும் துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகளே அரசுக்கு தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்துவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவித்து  உள்ளனர். இதனால் அவர் மீது முதல்வர் விஜய் அதிருப்தியில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்ற தொடக்கத்திலேயே நிர்வாகச் சிக்கல்களும் கட்சிக்குள் எழும் கருத்து வேறுபாடுகளும் தவெக அரசுக்கு சவாலாக மாறியுள்ளன. இந்த விவகாரங்களில் முதல்வர் விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார், அமைச்சரின் துறைகளில் மாற்றங்கள் வருமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

 

இதையும் படிங்க: ரூ.40 கோடியில் எம்.எல்.ஏ-க்களுக்கு சொகுசு கார்கள், மாதாந்திர படிகள்! இரவோடு இரவாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சி.டி.ஆர். நிர்மல் குமார் #விஜய் அரசு #TVK Government #தமிழக மின்வெட்டு #சிறைத்துறை சர்ச்சை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story