×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரட்டை சவால்.... இடையில் சிக்கி தவிக்கும் விஜய்! ஸ்டாலின் திட்டம் போட்டு நகர்த்தும் காய்...5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் போராட்டம்!!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய் முயற்சிக்கும் நிலையில், பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் நிபந்தனை விதித்ததும், கூட்டணி கட்சிகளை தக்க வைத்த ஸ்டாலின் நகர்வும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முனைந்துள்ள சூழலில் பல்வேறு அரசியல் நகர்வுகள் வேகமடைந்துள்ளன. 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபித்த பிறகே பதவியேற்பு சாத்தியம் என ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உறுதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, சட்டப்பேரவையில் தெளிவான பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு விஜய்க்கு தேவைப்படுகிறது. இதனால், அடுத்த கட்ட அரசியல் பேச்சுவார்த்தைகள் மீது கவனம் திரும்பியுள்ளது.

இதையும் படிங்க: நொடிக்கு நொடி பரபரப்பு..... ஆளுநருக்கு விஜய் அனுப்பிய இரண்டாவது கடிதம்! மே 7ல் நடக்க போவது என்ன? ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்பில்...!!!

கூட்டணி கட்சிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சென்னை நடைபெற்ற இந்த ஆலோசனையில், அனைத்து கட்சிகளும் திமுக கூட்டணியிலேயே தொடரும் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு ஆதரவு செல்லலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட கட்சிகளை கூட்டணிக்குள் தக்க வைத்திருப்பது, திமுகவின் முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. இதனால் தவெக தரப்பில் கணக்குகள் சிக்கலாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் நிலைப்பாடு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மறுபுறம், ஆளுநரின் முடிவில் பாஜக தரப்பின் அழுத்தம் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரத்தில், விஜய்க்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்பின் அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியுள்ளது. ஒருபுறம் ஆளுநரின் நிபந்தனை, மறுபுறம் திமுகவின் கூட்டணி கணக்கு என இரட்டை சவால்களை சந்தித்து வரும் விஜய், அடுத்த கட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: மெஜாரிட்டி இருக்கா? அது வெறும் டிராமா.. பின்னணியில் யாரு..? ஆளுநரின் முடிவுக்கு எதிராக.... விஜய்க்கு ஆதரவாக தமிழகத்தில் திரலும் புதிய புரட்சி.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #மு.க.ஸ்டாலின் #TVK Politics #Tamil Nadu Assembly #Governor RN Ravi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story