"ஆட்டமே ஆரம்பிக்கல அதுக்குள்ள அலறலா..." தமிழகத்தை பரபரப்பாக்கிய விஜய்.!! நடைபயணத்திற்கு தடையா.??
ஆட்டமே ஆரம்பிக்கல அதுக்குள்ள அலறலா... தமிழகத்தை பரபரப்பாக்கிய விஜய்.!! நடைபயணத்திற்கு தடையா.??
ரசிகர்களால் தளபதி என அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய் கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தனது கட்சியின் முதல் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இந்நிலையில் 2026 ஆம் வருடம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாடு தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் அரசியல் களத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் விஜயின் மாநாட்டையும் அவர் பேசியதையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. மாநாடு நடந்து முடிந்து ஒரு வாரமான நிலையிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பற்றிய சர்ச்சை தொடர்ந்து செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது திராவிட கட்சிகள் முதல் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் என அனைவரும் விஜய்யை தொடர்ந்து விமர்சித்து வருவது அவர் அரசியல் களத்தில் ஏற்படுத்தியிருக்கும் எழுச்சியை காட்டுகிறது என பல அரசியல் விமர்சகர்களும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
மதுரையில் நடந்து முடிந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என விஜய் பேசினார். இந்தக் கருத்துக்கு தலைவர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் இதுபோன்று பேசுவது மக்களிடம் தன்னைக் கொண்டு சேர்க்கும் என முன்கூட்டியே திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாநாட்டில் நடைபெற்ற பல விஷயங்களும் விஜய்யை மக்களிடம் கொண்டு சேர்க்க முக்கிய காரணமாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "சினிமா வசனம் பேசி ஆட்சியைப் பிடிக்க முடியாது..." தவெக-வுடன் கூட்டணி இல்லை.!! இபிஎஸ் அதிரடி பதில்.!!
தவெக மாநாட்டின் எழுச்சி தமிழக அரசியல் கட்சிகளின் உறக்கத்தை கெடுத்து விட்டது எனவும் பல அரசியல் வல்லுனர்கள் தங்களது கருத்தை முன் வைத்துள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் மாதம் விஜய் நடை பயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் ஆளும் கட்சி தரப்பிலிருந்து அவரது நடை பயணத்திற்கு அனுமதி கிடைப்பது முடியாத காரியம் எனவும் பலரும் கூறி வருகின்றனர். விஜய் அவரது நடை பயணத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பல சவால்களை சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "மாநாடு எப்படி நடத்தணும்னு இந்தியாவுக்கே சொல்லிக் கொடுப்பேன்..." விஜய்க்கு சீமான் பதிலடி.!!