×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீர் திருப்பம்! ரூ.600 கோடி சொத்து இருக்குது தான்..! நீதிமன்றத்தில் CM விஜய் தரப்பு பரபரப்பு வாதம்..!!!

பெரம்பூர் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில் முதல்வர் விஜய் தரப்பு வாதம் முன்வைத்தது. ரூ.600 கோடிக்கு மேல் சொத்து விவரங்கள் மற்றும் வருமான வரி கணக்குகள் மறைக்கப்படவில்லை என விளக்கம்.

Advertisement

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளின் இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளது. இன்று நடைபெற்ற விசாரணையில், விஜய் தரப்பில் வேட்புமனுவில் சொத்து மற்றும் வருமான வரி தொடர்பான தகவல்கள் முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

சொத்து விவரங்கள் மறைக்கப்படவில்லை என வாதம்

விஜய் மற்றும் அவரது மனைவிக்கு ரூ.600 கோடிக்கு மேல் உள்ள சொத்துகள் தொடர்பான விவரங்களும், வருமான வரி கணக்கு விவரங்களும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். வருமானம், மனைவியின் வருமானம், சொத்துகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் எதுவும் மறைக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இதையும் படிங்க: கொளத்தூர் எம்.எல்.ஏ. பாபுவுக்கு கழுத்தில் துளையிட்டு டிரக்கியாஸ்டமி சிகிச்சை.... வெளியான தகவலுக்கு மருத்துவமனை அளித்த பரபரப்பு விளக்கம்..!!

சிறு பிழைகளால் தேர்தலை செல்லாது எனக் கூற முடியாது

வேட்புமனுவில் சில இடங்களில் சிறிய அளவிலான பிழைகள் அல்லது முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டதாகக் கருத முடியாது என்றும் விஜய் தரப்பு வாதிட்டது. மேலும், இதுபோன்ற சிறிய பிழைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வேட்புமனுவை ஏற்றது தவறு எனக் கூற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாளையும் தொடரும் விசாரணை

பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள தேர்தல் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது தரப்பின் கோரிக்கையாக உள்ளது. இந்த மனுக்கள் தொடர்பான இறுதி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட வாதங்கள் நாளையும் நடைபெற உள்ளன.

 

இதையும் படிங்க: தேர்தல் நாளிலே வெடித்த வீடியோ...! 31 கோடி செலவு செய்தேன்....! தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா பேசிய வீடியோ! தமிழக அரசியலில் பரபரப்பு...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விஜய் தேர்தல் வழக்கு #Perambur Election Case #ரூ.600 கோடி சொத்து #Income Tax Details #சென்னை உயர்நீதிமன்றம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story