தேர்தல் நாளிலே வெடித்த வீடியோ...! 31 கோடி செலவு செய்தேன்....! தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா பேசிய வீடியோ! தமிழக அரசியலில் பரபரப்பு...!!!
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா 31 கோடி ரூபாய் தேர்தல் செலவு செய்ததாக பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா தொடர்பான வீடியோ ஒன்று வாக்குப்பதிவு நாளில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கடந்த தேர்தலில் 31 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும், அதற்குப் பலனாக ஒரு பைசா கூட கிடைக்கவில்லை என்றும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தற்போது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
31 கோடி ரூபாய் செலவு செய்ததாக பேச்சு
முன்னதாக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதையடுத்து தாராபுரம் தொகுதியில் அவருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் தெரிவித்ததாக கூறப்படும் 31 கோடி ரூபாய் தேர்தல் செலவு குறித்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்கணும்.. இல்லைன்னா நடக்குறது வேற! என்கிட்ட 40 வீடியோ ஆதாரம் இருக்கு... கட்சி நிர்வாகிகளை கதறவிட்ட தவெக வேட்பாளர் மோகன்..!!!
தேர்தல் செலவு வரம்பு குறித்து கேள்வி
தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்தல் செலவாக குறிப்பிட்ட உச்சவரம்புக்குள் மட்டுமே பணம் செலவிட முடியும். செலவிடப்படும் தொகைக்கான கணக்குகளையும் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், சத்யபாமா பேசியதாக வெளியாகியுள்ள வீடியோ உண்மையானது என உறுதி செய்யப்பட்டால், அதில் கூறப்பட்டுள்ள தொகை தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தவெக வட்டாரத்திலும் பரபரப்பு
சத்யபாமா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னணி குறித்து ஏற்கனவே எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. பணப் பரிமாற்றம் மற்றும் குதிரை பேரம் நடந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த சூழலில் 31 கோடி ரூபாய் செலவு செய்ததாக அவர் பேசியதாக வெளியாகியுள்ள காட்சி, சமூக வலைத்தளங்களில் மீண்டும் விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவுக்கு ஆதரவாக தவெக தலைவர் விஜய் ஹெலிகாப்டர் மூலம் வந்து பிரசாரம் மேற்கொண்டார். சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு தீவிர வீதி உலாவும் நடைபெற்றது. கட்சி தொண்டர்களும் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், வாக்குப்பதிவு நாளிலேயே வேட்பாளர் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ வைரலானது தவெக வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. விஜய் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு.!