×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவுங்களுக்கு மட்டும் தானா... எங்களுக்கும் கொடுத்தா நல்லா இருக்கும்! பாமக எம்எல்ஏ கணேஷ் பேச்சால் சிரிப்பில் மூழ்கிய சட்டப்பேரவை...! CM ரியாக்ஷன் தான் ஹைலைட்.. வைரல் வீடியோ!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.

Advertisement

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் காலையிலேயே அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு, இலவச காப்பீட்டு திட்டத்தின் வரம்பு அதிகரிப்பு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் சட்டப்பேரவையில் கவனம் பெற்றது.

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், உதவியாளர்

விசிக எம்எல்ஏ ஜோதி மணி முன்வைத்த கோரிக்கையை ஏற்று, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதோடு, ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ஒரு உதவியாளர் மற்றும் மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் பராமரிப்பு தொகையும் வழங்கப்படும் என தெரிவித்தார். அறிவிப்பு வெளியானதும் அவையில் இருந்த எம்எல்ஏக்கள் மேசையைத் தட்டி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: ஒரே நாளில் மாறிட்டுச்சே.... விஜய் அரசுக்கு அண்ணாமலை கொடுத்த ஷாக் டிரீட்மென்ட்.... பதறும் தவெக... எகிரும் திமுக..!!!

கணேஷ் எம்எல்ஏ கேட்ட கேள்வி

இதன்போது எழுந்து பேசிய பாமக எம்எல்ஏ கணேஷ், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படுமா அல்லது முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். முதலமைச்சரின் அறிவிப்பை அவர் தவறாகப் புரிந்துகொண்ட நிலையில் இந்த கேள்வியை முன்வைத்தார்.

கணேஷ் இவ்வாறு கேட்டதும் சௌமியா அன்புமணி சிரித்தார். அவரைப் பார்த்த முதலமைச்சர் விஜயும் சிரித்தார். இதையடுத்து உடனடியாக தலையிட்ட சபாநாயகர், முதல் முறையாக வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்பதை தெளிவுபடுத்தினார்.

சபாநாயகர் விளக்கம்

இதனால் அவையில் நிலவிய குழப்பம் உடனடியாக முடிவுக்கு வந்தது. முதலமைச்சர் அறிவித்த சலுகைகள் அனைத்து தொகுதி எம்எல்ஏக்களுக்கும் பொருந்தும் என்பது சபாநாயகரின் விளக்கத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த உரையாடல் சிறிது நேரம் சிரிப்பை ஏற்படுத்தியதுடன், எம்எல்ஏக்களுக்கான புதிய சலுகைகள் குறித்த அறிவிப்பும் கவனம் பெற்றது.

 

இதையும் படிங்க: குறுக்க புகுந்து இவங்க தான் கெடுத்துட்டான்கே.... திமுக ரகுபதியின் வினோத பேச்சை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த CM விஜய்..! வைரலாகும் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#முதல்வர் விஜய் #MLA கார் #தமிழக சட்டப்பேரவை #சௌமியா அன்புமணி #PAMAKA MLA கணேஷ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story