இது உங்களுக்கு தெரியுமா..? தெரியாதா..? பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாக்கத்தான் ஆட்சி நடத்துகிறீர்களா...? கள்ளக்குறிச்சி விவாகாரத்தில் முதல்வர் விஜய்யிடம் சரமாரியாக கேள்வி கேட்ட உதயநிதி ஸ்டாலின்..!!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் விவகாரத்தில் அரசு மீது குற்றம்சாட்டிய உதயநிதி ஸ்டாலின், சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை கைது செய்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் விவகாரத்தில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை பாதுகாக்கத்தான் ஆட்சி நடத்துகிறீர்களா என முதலமைச்சர் விஜய்க்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்த புகாரில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என அரசுத் தரப்பு கூறி வந்த நிலையில், அது பொய் என்பது இன்றைய ஆங்கில நாளிதழ் செய்தி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உதயநிதி 38, கனிமொழி 25.. மூத்த நிர்வாகிகளுக்காக பிளானை மாற்றிய ஸ்டாலின்! திமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு!!!
ஒரு மாதத்திற்கு முன்பே புகார் அளித்ததாக குற்றச்சாட்டு
பாதிக்கப்பட்ட பெண், ஒரு மாதத்திற்கு முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை என உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்ததும் தவறான தகவல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டதா?
இந்த விவகாரம் முதலமைச்சர் விஜய்க்குத் தெரியாமல் தலைமைச் செயலாளர் மறைத்தாரா அல்லது புகார் குறித்து தெரிந்தும் எம்எல்ஏவையும் அரசையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல் இருந்தாரா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
எம்எல்ஏவை கைது செய்ய கோரிக்கை
மேலும், புகாரை மறைக்க துணை போனதாகக் கூறப்படும் தலைமைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர் மற்றும் முதலமைச்சர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரிகளை உடனடியாக விடுப்பில் அனுப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை உடனடியாக கைது செய்து, நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டமன்றதுக்குள் ஸ்டாலின் நுழைவாரா..? பலத்தை நிரூபிக்குமா ஆளும் கட்சி..! கொளத்தூரில் நடக்கப்போவது என்ன? CM விஜய்யின் மாஸ்டர் மூவ்..!!!