×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதல் நாளிலே பத்தி எரியும் பகை.... விஜய் பதவியேற்றபோது உதயநிதியின் ரியாக்‌ஷன்னை பாருங்க! இணையத்தில் விவாதத்தை உண்டாக்கிய வீடியோ!!!

தமிழக சட்டமன்றத்தில் முதல்வராக விஜய் பதவியேற்ற போது, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலினின் முகபாவனை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழா பல அரசியல் கவனங்களை ஈர்த்தது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், தமிழக முதல்வராகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்ட தருணம் சட்டமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதே நேரத்தில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின் காட்டிய முகபாவனைகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கேமராவில் பதிவான உதயநிதியின் ரியாக்ஷன்

விஜய் மேடையில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது, உதயநிதி ஸ்டாலின் அமைதியாக அமர்ந்திருந்தார். குறிப்பாக, அவர் விஜய்யின் முகத்தை கூட பார்க்காமல் இருந்த தருணங்கள் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளன. இதையடுத்து அந்த வீடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

சில நெட்டிசன்கள், விஜய்யின் அரசியல் எழுச்சியும் முதல்வர் பதவியேற்பும் திமுக தரப்பில் ஒரு அரசியல் அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். அதேசமயம், இது சாதாரண முகபாவனை மட்டுமே என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இத யாருமே எதிர்பார்க்கல.... மேடையில் மேஜையை தூக்கிச் சென்ற CM விஜய்! வைரலாகும் அந்த ஆச்சரிய காட்சி...!!!

சமூக வலைதளங்களில் சூடுபிடித்த விவாதம்

பதவியேற்பு விழாவின் பல தருணங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், உதயநிதியின் ரியாக்ஷன் வீடியோ அதிக கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் இந்த காட்சிகளை வைத்து பல்வேறு அரசியல் கருத்துகளும் மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன.

அரசியல் மாற்றங்களால் பரபரப்பாக மாறியுள்ள தமிழக சூழலில், சட்டமன்றத்தின் முதல் நாளிலேயே இப்படியான காட்சிகள் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக சட்டச்சபையில் பதவியேற்க வந்த தவெக எம்.எல்.ஏ பல்லவி ! பாராட்டுக்கள் பல பல..... கோட்டையே நெகிழ்ந்த அரசியல் காட்சி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #உதயநிதி ஸ்டாலின் #Tamil Nadu Assembly #விஜய் பதவியேற்பு #dmk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story