இத யாருமே எதிர்பார்க்கல.... மேடையில் மேஜையை தூக்கிச் சென்ற CM விஜய்! வைரலாகும் அந்த ஆச்சரிய காட்சி...!!!
தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். பதவியேற்ற உடனே மூன்று முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டதும், மேடையில் எளிமையாக நடந்துகொண்டதும் கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அதிமுக, திமுக அல்லாத புதிய கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றிருப்பது தமிழக அரசியலில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களிலேயே மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக மூன்று முக்கிய அறிவிப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், சிங்கப்பெண்கள் சிறப்பு படை மற்றும் போதை ஒழிப்பு படை அமைப்பது தொடர்பான கோப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன.
பதவியேற்ற உடனே முக்கிய அறிவிப்புகள்
தகவலின்படி, தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான சில திட்டங்களை உடனடியாக செயல்படுத்தும் நோக்கிலேயே முதல் நாளிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் மீது அரசு தீவிர கவனம் செலுத்தும் என்ற செய்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்புகள் அமைந்திருந்தன.
இதையும் படிங்க: சற்று முன்.... விஜய் முதல்வர் பதவி பொறுப்பேற்றதும் பெண்களுக்காக விஜய் போட்ட முதல் கையெழுத்து இதுதான்! முழு திட்டங்கள் இதோ...!!!
மேடையிலேயே எளிமையாக நடந்துகொண்ட விஜய்
அதன்பின் விழா மேடையில் பேசிய முதல்வர் விஜய், ஆதரவாளர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சி முடிவடையும் நேரத்தில், தனது முன் இருந்த மேஜையை நகர்த்த உதவியாளர்கள் முயன்றபோது, அவர்களுடன் சேர்ந்து விஜயும் கையை கொடுத்து உதவினார்.
முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே எந்த தயக்கமும் இல்லாமல் சாதாரணமாக நடந்துகொண்ட அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில்கூட எளிமையை காட்டிய விதம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முகம் முழுக்க சிரிப்பு! செங்கோட்டையன் பதவி ஏற்க வந்ததும் எழுந்து நின்ற விஜய், ராகுல் காந்தி! நெகிழ்ச்சி வீடியோ..!!!