×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இது என்ன நியாயம்.... கட்சியில் இணைந்த உடனே சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய முக்கிய பதவி! தவெகவில் பரபரப்பு...!!!

தவெகவில் சமீபத்தில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியிலும் அரசியல் வட்டாரத்திலும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்த அவருக்கு, ‘தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் புத்தாக்க இயக்கத் தலைவர்’ பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நியமனம் தவெக நிர்வாகிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கட்சியில் இணைந்த உடனேயே முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதையும் படிங்க: எங்ககிட்டையே உங்க வேலையை காட்டுறீங்களா? தவெகவை மிரட்டிய காங்கிரஸுக்கு முதல்வர் விஜய் வைத்த செக்..!!!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன்

சிங்கை ராமச்சந்திரன், முதலமைச்சர் விஜய்யின் தனிச் செயலாளர் ஜெகதீஷின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இந்த நெருக்கத்தின் காரணமாகவே அவர் நேரடியாக விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களுக்கு பதவி இல்லை; 

இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலருக்கு இதுவரை முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால், சமீபத்தில் கட்சியில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு உடனடியாக முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பது நிர்வாகிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனால், கட்சிக்குள் பதவி வழங்கும் நடைமுறை குறித்தும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சிங்கை ராமச்சந்திரன் நியமனம் தொடர்பாக தவெகவில் அடுத்தகட்டமாக என்ன முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் அவசர நடவடிக்கையால் அரசியலில் பரபரப்பு! தவெக செக் வைக்கும் முக்கிய தொகுதிகள்.... அம்பலமான சீக்ரெட் பிளான்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தவெக #சிங்கை ராமச்சந்திரன் #CM Vijay #தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் #TVK Appointment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story