முதல்வர் விஜய்யின் அவசர நடவடிக்கையால் அரசியலில் பரபரப்பு! தவெக செக் வைக்கும் முக்கிய தொகுதிகள்.... அம்பலமான சீக்ரெட் பிளான்!!!
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதில் நீடிக்கும் நீதிமன்றத் தடையை நீக்கக் கோரி, முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் தேதியை அறிவிக்காத நிலையில், இந்த அவசர நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. நவம்பர் 4-ஆம் தேதி வரை அவகாசம் இருக்கும் சூழலில், விஜய் நேரடியாக நீதிமன்றத்தை நாடியிருப்பதன் பின்னணி குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கு சிக்கல்
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதையடுத்து, செப்டம்பர் 8-ஆம் தேதி வரை இடைத்தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேர்தல் பணிகளை மேற்கொள்ள குறைந்தபட்சம் 28 நாட்கள் தேவைப்படும் நிலையில், அந்தத் தடைக்கு மேல் நீட்டிப்பு ஏற்பட்டால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்துவதில் சிக்கல் உருவாகலாம்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... தவெக -வுக்கு ஆப்பு வைத்த கம்யூனிஸ்ட் கட்சி..! இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? அதிர்ச்சியில் முதல்வர் விஜய்..!!!
தவெகவின் கணக்கில் முக்கியமான தொகுதிகள்
தடை தொடர்ந்தால், தேர்தல் வழக்குகள் இல்லாத தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் நிலை உருவாகலாம். ஆனால், திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தவெகவின் முக்கிய எதிர்பார்ப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக விஜய் வெற்றி பெற்ற தொகுதியும், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் தொடர்புடைய தொகுதிகளும் அக்கட்சியின் அரசியல் கணக்கில் முக்கிய இடம் பெற்றுள்ளன.
இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி இடைத்தேர்தல் தள்ளிப்போகாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், முதல்வர் விஜய் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணையின்போது தடை மேலும் நீட்டிக்கப்படாமல் இருப்பதற்கான சட்ட நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது.
அதிமுகவும் சட்டப் போருக்கு தயாராகிறது
மறுபுறம், தவெகவின் இந்த நடவடிக்கையை அதிமுக தரப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது. குதிரை பேர விவகாரத்தைத் தொடர்ந்து ராஜினாமா செய்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான தகுதி நீக்க வழக்குகள் நிலுவையில் உள்ளதால், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடாக உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது. மற்ற தொகுதிகளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பு கூறியுள்ளது. இதனால் இடைத்தேர்தல் விவகாரம் வரும் நாட்களில் தமிழக அரசியலில் மேலும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பரபரப்பு! அமைச்சரவையில் இருந்து மரிய வில்சன் நீக்கம்? அதிரடி புகார்..!!!