×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

“அவதூறுக்கும் மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்”.. திமுகவை விளாசிய அமைச்சர் ரமேஷ்!

“அவதூறுக்கும் மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்”.. திமுகவை விளாசிய அமைச்சர் ரமேஷ்!

Advertisement

மிசா சட்டம் தொடர்பாகவும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் குறித்து கடுமையான மற்றும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், "ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் கட்சி தமிழகத்தில் தி.மு.க.வைத் தவிர வேறு எதுவும் இல்லை.

குறிப்பாக, இறைவனுக்குச் சேவை செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்த ஒருவர், அந்தப் பதவியின் மாண்பையும், பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து, வாய்க்கு வந்தபடி தரக்குறைவாகப் பேசுவதும், மாற்றுக் கட்சியினரை அவமதிப்பதும், பொதுமக்களையே அச்சுறுத்துவது போன்ற செயல்கள் அவரது அரசியல் தரத்தை தொடர்ந்து வெளிப்படையாக காட்டுகிறது. 

இதையும் படிங்க: "யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள்.. திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக!

அமைச்சர் பதவி என்பது அதிகாரத்தை காட்டுவதற்கான பதவி அல்ல. அந்தப் பொறுப்பில் முன்பு இருந்த ஒருவர் இன்று மூன்றாம் தர அரசியல் பேச்சாளரைப் போல நடந்து கொள்வது வெட்கக்கேடானது. எங்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுகிறாரோ, அதைவிட கீழே இறங்கி பதிலளிப்பது எங்கள் அரசியல் பண்பாடு அல்ல. எங்கள் மாண்புமிகு முதல்வர் அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை. ஆனால், ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிடக் கூடாது.

எனவே, வார்த்தைகளை அளந்து பேசட்டும். இல்லையென்றால், அவர்கள் தொடங்கிய அதே அரசியல் மொழியில் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் ஆனால் அவதூறையும் மிரட்டலையும் அரசியல் என்று நினைத்தால், அதற்கான விலையை அரசியல் களத்திலேயே சந்திக்க வேண்டியிருக்கும்" என அவர் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: ப்யூஸ் போன தவெக அரசு.. மின்வெட்டு விவகாரத்தில் அரசை விளாசிய உதயநிதி!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK Ramesh #Minister Ramesh #dmk #DMK Protest #MISA issue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story