ப்யூஸ் போன தவெக அரசு.. மின்வெட்டு விவகாரத்தில் அரசை விளாசிய உதயநிதி!
ப்யூஸ் போன தவெக அரசு.. மின்வெட்டு விவகாரத்தில் அரசை விளாசிய உதயநிதி!
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் மின்சாரம் இருந்தபோதிலும் குறைந்த மின்னழுத்தம் (Voltage) பிரச்சினை நிலவி வருவதாகக் கூறி, மக்கள் பல்வேறு பகுதிகளில் வீதிக்கு வந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், பொதுமக்கள் மின்வெட்டு மற்றும் மின்னழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை சரிசெய்ய வேண்டிய துறையின் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தேவையற்ற அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாக விமர்சித்துள்ளார்.
மேலும், மின்சாரம், ஆவின் பால் விநியோகம் உள்ளிட்ட மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் அரசு திணறி வருவதாக உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, ‘ப்யூஸ் போன’ த.வெ.க. அரசு திசைதிருப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு, மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தனது பதிவில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... ஸ்டாலினை நேரில் சந்தித்த மல்லை சத்யா! அறிவாலயத்தில் நடந்த அதிரடி ட்விஸ்ட்...!!!