×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தை கடந்து விஜய் அரசியல் பயணம்! கேரளாவில் தவெக அலுவலகம் திறப்பு!

தமிழகத்தை கடந்து விஜய் அரசியல் பயணம்! கேரளாவில் தவெக அலுவலகம் திறப்பு!

Advertisement

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தை அண்டை மாநிலங்களிலும் விரிவுபடுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

கேரளாவில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியினர் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தவெகவுக்கு ஆதரவை திரட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தைத் தாண்டியும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாக தவெக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உங்கள் குடும்பத்தினரிடம் காட்ட முடியுமா?.. ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கடும் கண்டனம்!

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை எதிர்நோக்கி தவெக தனது அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், கேரளாவில் முதல் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. கேரளத்திலும் தவெக தடம் பதிக்கிறதா?” என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகள்.. முதல்வரை விமர்சித்த விஜய் சேதுபதி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #TVK office #Palakkad #Kerala TVK office
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story