×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகள்.. முதல்வரை விமர்சித்த விஜய் சேதுபதி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகள்.. முதல்வரை விமர்சித்த விஜய் சேதுபதி?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்கிய நிலையில், பிளாக் பாண்டி உடல்நலக் காரணங்களால் சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதனிடையே ஷாத்திகா, பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் உரையாடிய விஜய் சேதுபதி, ஜனநாயகம் மற்றும் தலைமைத்துவம் குறித்து அவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது ஷாத்திகா தலைவராக பொறுப்பேற்றபோது அளித்த வாக்குறுதிகளையும் அவர் போட்டியாளர்கள் முன்னிலையில் வாசித்துக் காட்டினார்.

தொடர்ந்து தலைமைத்துவம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, “லீடர்னா என்னன்னே தெரியாம, லீடர்ஷிப்புன்னா என்னன்னே தெரியாம, வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு, பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியைத் தூக்கிப் போட்டுட்டு தெறிச்சு ஓடறது லீடருக்கான குவாலிட்டி இல்ல. அதுக்குப் பேரு ஏமாத்துவேலை” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: தவெக - வை தடுக்க திமுக, அதிமுக போடும் திட்டம்! ஆனால் முதல்வர் விஜய் போடும் டபுள் கால்குலேஷன்... அதிகாரிகளுக்கு பரந்த ஆர்டர்! இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி ...!!!

விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் பேசிய விதம் மற்றும் பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், அவரது கருத்து தமிழக முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜய் சேதுபதியின் பேச்சு தொடர்பான விவாதம் இணையத்தில் மேலும் சூடுபிடித்துள்ளது.

இதையும் படிங்க: சட்டமன்றமா… சினிமா தியேட்டரா? தவெக அரசை கடுமையாக சாடிய சீமான்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay sethupathi #vijay #Vijay television #Jio Hotstar #CM Vijay #bigg boss tamil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story