×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என் மீது எந்த தவறும் இல்லை.. நான் ராஜினாமா செய்ய மாட்டேன்! தவெக தலைமைக்கே ட்விஸ்ட் கொடுத்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்..! அதிர்ச்சியில் தவெக.!!!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கைது செய்யப்பட்ட தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், பதவி விலக மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தவெக கட்சியிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரில் கைது

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதுடன், முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் அருள் விக்னேஷ் மீது புகார் அளிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 23-ம் தேதி பாதிக்கப்பட்ட அதிகாரி தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: சிறையில் பதற்றத்துடன் இருக்கும் தவெக MLA..! இரவு நேரத்தில் தூங்கமின்றி நடமாட்டம்... அருள் விக்னேஷ் குறித்து வெளியான பகீர் தகவல்...!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் காமினி மேற்பார்வையில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் தலைமையிலான குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

பதவி விலக கட்சித் தலைமை அழுத்தம்?

கைது செய்யப்பட்ட அருள் விக்னேஷ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதும் தவெக தலைமை தரப்பில், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜினாமா செய்ய மறுத்த அருள் விக்னேஷ்

ஆனால், கட்சித் தலைமையின் அழுத்தத்திற்கு அவர் பணிய மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'என் மீது எந்தத் தவறும் இல்லை; நான் ராஜினாமா செய்ய மாட்டேன்' என்று அருள் விக்னேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. வழக்கின் விசாரணை, ஜாமின் மனு மீதான நடவடிக்கை மற்றும் பதவி விலகல் விவகாரம் என அடுத்தடுத்த நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

 

இதையும் படிங்க: 3 மணி நேர விசாரணை..! கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. வழக்கில் வெளியான பகீர் தகவல்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தவெக எம்எல்ஏ #அருள் விக்னேஷ் #பெண் ஐஏஎஸ் புகார் #TVK MLA #ஜாமின் மனு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story