×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 மணி நேர விசாரணை..! கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. வழக்கில் வெளியான பகீர் தகவல்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக இடம்பெற்றுள்ள மூன்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் தற்போது நேரடி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

3 வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, வருவாய் கோட்டாட்சியர் முருகன் மற்றும் வட்டாட்சியர் சேகர் ஆகியோரிடம் நேற்று (நவம்பர் 24) விசாரணை நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹனாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணை, 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இதையும் படிங்க: இது உங்களுக்கு தெரியுமா..? தெரியாதா..? பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாக்கத்தான் ஆட்சி நடத்துகிறீர்களா...? கள்ளக்குறிச்சி விவாகாரத்தில் முதல்வர் விஜய்யிடம் சரமாரியாக கேள்வி கேட்ட உதயநிதி ஸ்டாலின்..!!!

வழக்கு தொடர்பான விவரங்கள், சம்பவத்தின் பின்னணி மற்றும் சாட்சியங்கள் குறித்து மூன்று அதிகாரிகளிடமும் தனித்தனியாகக் கேள்விகள் கேட்கப்பட்டன. இதையடுத்து, அவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதிய விசாரணை அதிகாரியாக சிருஷ்டி சிங் நியமனம்

இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்கை நீதிமன்றம் நியமித்துள்ளது. இதனால், வழக்கின் விசாரணை புதிய அதிகாரியின் தலைமையில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதையடுத்து, மூன்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கைகள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் இன்று (நவம்பர் 25) புதிய விசாரணை அதிகாரியான சிருஷ்டி சிங்கிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த ஆவணங்களைப் பெற்ற பிறகு, அவர் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: # BREAKING : ஆபாச மெசேஜ்... கள்ளக்குறிச்சி MLA மீது வழக்கு பதிவு! சற்றுமுன் பரபரப்பு...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#அருள் விக்னேஷ் #தவெக எம்எல்ஏ #கள்ளக்குறிச்சி #பாலியல் தொல்லை புகார் #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story