இடைத்தேர்தலில் இப்படி ஒரு கணக்கா? முதல்வர் விஜய் வேட்பாளர்களுக்கு போட்ட சீக்ரெட் ஆர்டர்! தவெகவின் அல்டிமேட் மூவ்... அதிர்ச்சியில் எதிர்த்தரப்பு..!!!
இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தவெக தீவிர வியூகம் வகுத்துள்ளது. எதிர்ப்பு உள்ள பகுதிகளில் புதிய பிரசார அணுகுமுறையும்
வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக வெற்றி கழகம் தீவிரமாக களப்பணியை மேற்கொண்டு வருகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே, வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு உள்ள பகுதிகளை கையாள புதிய பிரசார வியூகமும் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு லட்சம் வாக்குகள் இலக்கு
இடைத்தேர்தலில் வெற்றியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தவெக கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக தொகுதி வாரியாக களப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரடியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதுடன், வாக்காளர்களை அணுகுவதற்கான புதிய தேர்தல் உத்திகளையும் கட்சி கையாண்டு வருகிறது.
ராஜினாமா செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு?
இதனிடையே, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, தற்போது அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது சில பகுதிகளில் மக்கள் அதிருப்தி தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பை கருத்தில் கொண்டு, வேட்பாளர்கள் நேரடியாகச் செல்லும்போது சிக்கல் ஏற்படக்கூடிய பகுதிகளை கட்சி நிர்வாகிகள் கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்ப்பு அதிகம் உள்ள பகுதிகளில் புதிய வியூகம்
குறிப்பாக எதிர்ப்பு அதிகமாக காணப்படும் பகுதிகளில் வேட்பாளர்கள் நேரடியாக பிரசாரம் செய்வதைத் தவிர்க்குமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் குழுவினர் அந்த பகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், ஒரே தொகுதியில் வெவ்வேறு அணுகுமுறைகளுடன் இரு தரப்பினரும் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த அரசியல் நகர்வுகள் தொகுதி களத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளன.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.... என்னையும் தான் CM ஆக்க ஆசைப்படுறாங்க....! உண்மையை புட்டு புட்டு வைத்த திருமாவளவன்...!!!