தவெக கூட்டணி பெயரில் நடந்த மாற்றம்… பின்னணியில் திருமாவளவன்.. விசிக நிர்வாகி பரபரப்பு பதிவு!
தவெக கூட்டணி பெயரில் நடந்த மாற்றம்… பின்னணியில் திருமாவளவன்.. விசிக நிர்வாகி பரபரப்பு பதிவு!
தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ள தவெக தலைமையிலான கூட்டணிக்கு, முதலில் ‘சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரே முன்மொழியப்பட்டதாக விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை பனையூரில் நடைபெற்ற தவெக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணிக்கு பெயர் சூட்டுவதுடன், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் தலைமையில் புதிய கூட்டணி உதயம்! புதிய பெயர்... புதிய அரசியல் கணக்கு!
மேலும், தவெக கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான ஆலோசனைகளுக்குப் பிறகு, கூட்டணிக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஆரம்பத்தில் ‘சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டதாக சிந்தனைச் செல்வன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பின்னர் கூட்டணியின் பெயரில் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவனின் ஆளுமை மற்றும் அவரது வலியுறுத்தலின் காரணமாக, கூட்டணியின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டதாக சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, முதலில் முன்மொழியப்பட்ட ‘சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயர் திருத்தப்பட்டு, தற்போது ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என மாற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக தொடர்ந்து அரசியல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கூட்டணியின் கொள்கை, சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை ஆகிய அம்சங்களை முன்னிறுத்தும் வகையில் பெயர் அமைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: கூட்டணி குறித்து திட்டவட்டமாக அறிவித்த திருமாவளவன்! பரபரக்கும் அரசியல் களம்!!!