×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

CM விஜய்யின் நடை, உடை, பாவனையை ரசிக்கும் ஸ்டாலின்...? முப்பெரும் விழாவா.? இல்ல ஒப்பாரி விழாவா..? திமுகவை வச்சு செய்த தவெக ஐடி விங்..!!!

திமுக முப்பெரும் விழாவில் விஜய்யை விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த தவெக ஐடி விங், விழாவை ஒப்பாரி விழா என விமர்சித்துள்ளது.

Advertisement

திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் விஜய்யை மு.க.ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. முப்பெரும் விழாவா, ஒப்பாரி விழாவா என கேள்வி எழுப்பியுள்ள தவெக, ஸ்டாலினின் பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

அண்ணா குறித்து பேசவில்லை என விமர்சனம்

தவெக ஐடி விங் வெளியிட்ட அறிக்கையில், பேரறிஞர் அண்ணா குறித்து ஒற்றை வார்த்தைகூட பேசாத மேடையில், தங்களது தலைவரின் நடை, உடை, பாவனை குறித்து விரிவாக அலசியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் வீட்டில் இருந்து மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பவர் போல ஸ்டாலின் செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளது.

இதையும் படிங்க: "யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள்.. திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக!

மேலும், கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக மூன்று முறை மறுமதிப்பீடு கோரினார் என்றும் தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. மிசா கைது தொடர்பாக தற்போது விளக்கம் அளித்துவரும் நிலையில், அதற்காக ஒன்பது நிமிட காணொளி வெளியிடப்பட்டதன் காரணம் என்ன என்றும் அறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.

முதலீடு தொடர்பான பழைய விவகாரத்தையும் சுட்டிக்காட்டிய தவெக

“வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று விஜய் கேள்வி எழுப்பியபோது, வெற்று வெள்ளைத்தாளை காட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தையும் தவெக ஐடி விங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த நிகழ்வை மறந்துவிட்டாரா என்றும் விமர்சனம் செய்துள்ளது.

தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகளை ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதற்கும் தவெக பதிலளித்துள்ளது.

“நடிக்கிறார்” என்ற விமர்சனத்துக்கு பதிலடி

இமேஜ் உருவாக்குவதற்காக Walking with Harry Potter stick, Instagram குழந்தைகளுடன் mini vlog, வெளிநாட்டு பயணங்களில் cycle ride, monovlog என தொடர்ந்து விளம்பரப் படப்பிடிப்பு நடத்தி வந்ததாக ஸ்டாலினை தவெக ஐடி விங் விமர்சித்துள்ளது. சினிமா நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்ததாகக் கூறப்படும் விஜய்யைப் பார்த்து “நடிக்கிறார்” என்று விமர்சிப்பது உச்சபட்ச நகைமுரண் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், “ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி” என விமர்சித்துவிட்டு, தாமே ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைப்பதாகவும் தவெக ஐடி விங் குற்றம்சாட்டியுள்ளது. இறுதியாக, திமுக முப்பெரும் விழா தொடர்பான விமர்சனங்களுக்கு மத்தியில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள இந்தப் பதிலடி தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

 

இதையும் படிங்க: ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் பேசிய வீடியோ.. திமுகவின் ஆபாச பாரம்பரியம்! – தவெக கடும் தாக்கு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தவெக ஐடி விங் #TVK IT wing #திமுக முப்பெரும் விழா #மு.க.ஸ்டாலின் #விஜய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story