×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் பேசிய வீடியோ.. திமுகவின் ஆபாச பாரம்பரியம்! – தவெக கடும் தாக்கு!

ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் பேசிய வீடியோ.. திமுகவின் ஆபாச பாரம்பரியம்! – தவெக கடும் தாக்கு!

Advertisement

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசியதாகக் கூறப்படும் பழைய வீடியோ தொகுப்பை தமிழக வெற்றிக் கழகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பதிவில், “தலைமுறை தலைமுறையாகத் தொடரும் திமுகவின் ஆபாச பாரம்பரியம்” என தவெக கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், “பெண்ணியம், பெண் விடுதலை என்று பேசும் திமுக, கட்சி மேடை, கல்யாண மேடை, பொது மேடை என எந்த இடமாக இருந்தாலும் ஆபாசமான பேச்சுகளை முன்வைக்கிறது” என அந்தப் பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், குடும்ப வாரிசு, ஆபாச பேச்சு, வன்மம், அவதூறு = திமுகவின் தலைமை தகுதி சான்றிதழ் என்றும் தவெக விமர்சனம் தெரிவித்துள்ளது. பேச்சில் இவ்வளவு ஆபாசம் இடம்பெற்றிருந்தால், அவர்களின் ஆட்சிக் காலத்தில் எவ்வளவு கண்ணியம் இருந்திருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசியலில் திமுக–தவெக இடையேயான வார்த்தைப் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் மற்றும் அரசியல் விமர்சனங்களில் கண்ணியம் கடைப்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது தவெக வெளியிட்டுள்ள இந்த வீடியோவும் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.... களம் இறங்க அதிரடி காட்டும் உதயநிதி! மதுராந்தகம், தாராபுரத்தில் மும்முனைப் போட்டி உறுதி.... நாளை வெளியாகும் அதிரடி அறிவிப்பு!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dmk #TVK #stalin #udhayanithi #TVK IT wing #TVK Vijay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story