×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிமுகவின் எம்.எல். ஏக்கலுக்கு அமைச்சர் பதவி வழங்கினால் TVK ஆட்சி காலி! விஜய், செங்கோட்டையனை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது.... டிடிவி தினகரன் பகீர் எச்சரிக்கை..!!!

அதிமுக ஆதரவை நாடும் தவெக அரசை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement

அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்துவிட்டு, தற்போது அதே கட்சியின் ஆதரவை நாடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசு மற்றும் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.

மேலும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக மட்டும் அரசியல் நடத்த முடியாது என்றும், மக்கள் தற்போது நிஜ நிலையை உணரத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

“அதிமுகவை அழிக்க நினைக்கும் கட்சிக்கு ஆதரவா?”

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழக அரசின் நிலைமை தற்போது உறுதியற்ற சூழலில் இருப்பதாக விமர்சித்தார். அதிமுக மற்றும் அதன் தொண்டர்களை பலவீனப்படுத்த முயற்சி செய்கிற கட்சிக்கு, அதிமுக பெயரை பயன்படுத்தி சிலர் ஆதரவு அளிப்பது அரசியல் நெறிக்கு எதிரானது என்றார்.

இதையும் படிங்க: எடப்பாடி கனவு தூள் தூள்ளானது.... ஜெயலலிதா ஆத்மா தண்டனை கொடுக்குது! எடப்பாடி மீதுள்ள குமுறலை கொட்டிய செங்கோட்டையன்.!!!

அமைச்சர் பதவிக்காக சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசை ஆதரிக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், அதுபோன்ற முடிவுகள் பின்னர் அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் நீடிக்காது

“இன்ஸ்டா ரீல்ஸைப் பார்த்து மக்கள் வாக்களித்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்கள் உண்மையான சூழ்நிலையைப் பார்க்கிறார்கள்” என்று கூறிய தினகரன், விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் ஏமாற்றம் உருவாகி வருவதாக தெரிவித்தார்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் மரபைச் சேர்ந்தவர்கள், அதிமுகவுக்கு எதிராக செயல்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம்

சட்டமன்றக் குழு கொறடா நியமிக்கும் அதிகாரம் கட்சித் தலைமையிடமே இருப்பதாக கூறிய தினகரன், எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள கொறடாவின் உத்தரவே சட்டப்படி செல்லுபடியாகும் என்றார். அந்த உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவு அளித்தால், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், அதன் பின்னணியில் பெரிய அளவில் அரசியல் பேரம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழும் என்றும் அவர் கூறினார். அப்படி ஏதேனும் நடந்தால், சிபிஐ விசாரணை கோரப்படும் என்றும் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்தார்.

 

இதையும் படிங்க: தவறு எப்போ நடக்கும்ன்னு திமுக காத்துக்கிட்டு இருக்கு.... யாரும் வேணாம்! நீங்க மறுதேர்தலுக்கு ரெடி ஆகுங்க! தவெகவுக்கு 200+ சீட் கன்பார்ம்.... முதல்வர் விஜய்க்கு மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையாயின் அதிரடி கருத்து....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ttv dhinakaran #விஜய் #TVK Government #அதிமுக #Tamil Nadu Politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story