×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எடப்பாடி கனவு தூள் தூள்ளானது.... ஜெயலலிதா ஆத்மா தண்டனை கொடுக்குது! எடப்பாடி மீதுள்ள குமுறலை கொட்டிய செங்கோட்டையன்.!!!

கோவை விமான நிலையத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பணம் இல்லாமல் தேர்தலை சந்தித்த முதல்வர் விஜயை பாராட்டியதுடன், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் விஜயின் தலைமையிலான அரசை பாராட்டியும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. பணம் கொடுக்காமல் தேர்தலை சந்தித்த முதல் தலைவர் என்ற புதிய வரலாற்றை விஜய் உருவாக்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலை எதிர்கொண்ட ஆட்சி தமிழகத்தில் உருவாகியுள்ளது என்று கூறிய செங்கோட்டையன், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் தூய்மையான நல்லாட்சியை தமிழக வெற்றிக் கழகம் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

“நிரந்தர முதல்வராக வரலாறு படைப்பார்”

எதிர்காலத்தில் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக வரலாறு படைக்கக்கூடியவர் விஜய் மட்டுமே என்றும் அவர் புகழாரம் சூட்டினார். மேலும், 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, மதுக்கடைகள் அகற்றம் போன்ற அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக உள்ளன என்றார்.

இதையும் படிங்க: மக்கள் சக்தி இருக்கும் இடத்தில் தான்.... ஒரே போடாய் போட்ட ஆதவ் அர்ஜுனா! தவெகவில் இணையும் 2 திமுகவின் முக்கிய அமைச்சர்கள்.... அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அதிமுக சரிவு குறித்து விமர்சனம்

அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து சரிவை சந்தித்து வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் மீதும் கட்சி தலைவர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்குத்தான் இத்தகைய நிலை ஏற்படும் என்று கூறினார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கியபோது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் தேவையில்லை, தன் படம் மட்டும் போதும் என பாராட்டு விழா நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என்று குற்றம்சாட்டினார். ஆனால், தாம் இன்றும் ஜெயலலிதாவின் படத்தை தனது பாக்கெட்டில் வைத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

“கனவு தூள் தூளானது”

தன் படம் மட்டும் போதும் என்ற சுயநல எண்ணத்தோடு செயல்பட்ட எடப்பாடி பழனிசாமியின் கனவு தற்போது முறியடிக்கப்பட்டுவிட்டதாக செங்கோட்டையன் கூறினார். ஜெயலலிதாவின் ஆத்மா அவருக்கு தண்டனை கொடுத்து வருகிறது என்பதை இந்த நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

 

இதையும் படிங்க: பதவி ஆசை எடப்பாடிக்கு பழினிச்சாமி கண்ணை பறித்துவிட்டது! உயிர் இருக்கும்வரை எதிர்ப்போம்.... சி.வி. சண்முகத்தின் அதிரடி சபதம்! சென்னையில் பரபரப்பு பேட்டி!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#செங்கோட்டையன் #Vijay Government #கோவை விமான நிலையம் #Edappadi Palaniswami #தமிழக வெற்றிக் கழகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story