பதவி ஆசை எடப்பாடிக்கு பழினிச்சாமி கண்ணை பறித்துவிட்டது! உயிர் இருக்கும்வரை எதிர்ப்போம்.... சி.வி. சண்முகத்தின் அதிரடி சபதம்! சென்னையில் பரபரப்பு பேட்டி!!!
அதிமுக பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தது கட்சிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து கட்சிப் பதவியில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை நேரடியாக குறிவைத்து அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை எதிர்ப்பதே அதிமுகவின் அடிப்படை கொள்கை என்றும், ஆனால் பதவி ஆசை காரணமாக அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “தீயசக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் உண்மையான அதிமுக தொண்டர்களின் எண்ணம்” என்று அவர் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி மீது நேரடி தாக்கு
செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், “பதவி ஆசை எடப்பாடி பழனிசாமியின் கண்ணை மறைத்துவிட்டது” என்று கடுமையாக விமர்சித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், “ஒரு உண்மையான அதிமுக தொண்டன் உயிர் இருக்கும் வரை திமுகவை எதிர்ப்பான்” என ஆவேசமாக பேசிய அவர், பதவி என்பது தற்காலிகம் தான் என்றும் தனது லட்சியம் மாறப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு
சி.வி. சண்முகத்தின் இந்த பேச்சு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கட்சிக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மீண்டும் வெளிப்படையாக பேசப்படத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இதற்கு என்ன பதில் வரும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிமுகவின் முக்கிய புள்ளி! செம ஷாக்கில் எடப்பாடி..!!!