×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகை த்ரிஷா? முதல்வர் விஜய்யின் அடுத்த அரசியல் ஆஃபர்.... தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு...!!!

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகை த்ரிஷா போட்டியிடலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Advertisement

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி புதிய அரசியல் யூகங்கள் வெளியாகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகை த்ரிஷா வேட்பாளராக களமிறங்கலாம் என்ற தகவல் ஒரு முன்னணி வார இதழில் செய்தி வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அரசியல் வட்டாரத்திலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுகுறித்து கட்சி தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தவெக தலைமையில் தீவிர ஆலோசனையா?

ஒரு முன்னணி வார இதழில் வெளியான தகவலின்படி, திருச்சி கிழக்கு தொகுதியில் தவெகவின் வெற்றி வாய்ப்பு சாதகமாக இருப்பதாக கட்சித் தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் த்ரிஷாவை வேட்பாளராக அறிவித்தால் அது கூடுதல் கவனத்தை ஈர்க்கும் என்ற கருத்தும் கட்சிக்குள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சீமானை பேரவைக்குள் கொண்டுவர திமுகவின் பலே திட்டம்? அம்பாசமுத்திரத்தில் ரகசிய டீல்.... அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்..!!!

கட்சிப் பொறுப்பு குறித்த தகவல்

த்ரிஷாவுக்கு கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தகவல்கள் குறித்து தமிழக வெற்றிக் கழகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

லாரன்ஸ் பெயர் குறித்து பரவும் தகவல்கள்

இதேநேரத்தில், தவெக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட லாரன்ஸ் தற்போது இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுதொடர்பாகவும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. எனவே, தற்போது வெளியாகி வரும் தகவல்கள் அனைத்தும் அரசியல் யூகங்களாகவே பார்க்கப்படுகின்றன. கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே வேட்பாளர் தொடர்பான நிலை தெளிவாகும்.

 

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... முதல்வர் விஜய் - திருமாவளவன் இணையும் புதிய கூட்டணி? நாளை வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#trisha #TVK #Trichy East #by election #Tamil Nadu Politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story