×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திமுக தான் எங்களை கைவிட்டது.. நாங்கள் வெளியேறவில்லை.. திருமாவளவன் அதிரடி பேச்சு!

திமுக தான் எங்களை கைவிட்டது.. நாங்கள் வெளியேறவில்லை.. திருமாவளவன் அதிரடி பேச்சு!

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தை, திமுக குறைத்து மதிப்பிட்டதே அதன் தோல்விக்கு முக்கியக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தவெக தலைவர் விஜய் குறித்து தாம் முன்பு விமர்சனம் செய்ததாகவும், ஆனால் பின்னர் அரசியல் சூழ்நிலையில் விஜய் காங்கிரஸ் மற்றும் தன்னிடம் ஆதரவு கேட்டதாகவும் கூறினார். ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு தவெகவுக்கு விசிக ஆதரவு அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், விசிக கூடாரம் காலியாகிவிட்டதால் விஜய்யின் பின்னால் சென்றதாகவும், பதவிக்காக கூட்டணி மாறியதாகவும் என் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பதவி ஆசை இருந்திருந்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியபோதே நானும் சென்றிருப்பேன். என் நம்பகத்தன்மையை சிதைக்க சிலர் முயற்சி செய்தனர் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தவெக கூட்டணி பெயரில் நடந்த மாற்றம்… பின்னணியில் திருமாவளவன்.. விசிக நிர்வாகி பரபரப்பு பதிவு!

மேலும், 2024-ம் ஆண்டிலேயே திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற முயற்சித்ததாகவும், ஆனால் கூட்டணி உடையாமல் தான் பார்த்துக்கொண்டதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். தற்போது விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் விலகியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். திமுகதான் எங்களை கைவிட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக–காங்கிரஸ் கூட்டணிக்குள் போதிய நல்லிணக்கம் இல்லை என்றும் திருமாவளவன் விமர்சித்தார். மதிமுகவை திமுக சின்னத்தில் போட்டியிடச் செய்தது, மக்கள் நீதி மய்யத்துக்கு போதிய தொகுதிகள் வழங்காதது உள்ளிட்ட கூட்டணி அணுகுமுறைகள் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார். தேமுதிக-வை கூட்டணிக்குள் கொண்டு வந்து கூடுதல் தொகுதிகள் வழங்கியதும் பிரச்சினைக்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், பாஜக அல்லாத கூட்டணி என்பது மதச்சார்பற்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும், அதனால் கூட்டணியின் பெயரில் "மதச்சார்பற்ற” என்ற வார்த்தையை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்யிடம் தாம் வலியுறுத்தியதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவெக கூட்டணி பெயரில் நடந்த மாற்றம்… பின்னணியில் திருமாவளவன்.. விசிக நிர்வாகி பரபரப்பு பதிவு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thirumavalavan #Vck #Dmk alliance #TVK Alliance
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story