திட்டம் போட்டு காய் நகர்த்தினாலும்... எங்ககிட்ட உங்க வேலையை காட்ட முடியாது! விசிக களத்தில் வேறு யாரும்... புதிய பரபரப்பை கிளப்பிவிட்ட திருமாவளவன்.!!!
மேலவளவு வீரவணக்க நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட வீடியோ அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சியினருக்கு அவர் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்களும் பேசுபொருளாகியுள்ளன.
ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள மேலவளவு வீரவணக்க நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அவர் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.
விசிக வளர்ச்சி எதிரிகளுக்கு அச்சம்?
அனைத்து தரப்பு மக்களிடமும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து நன்மதிப்பைப் பெற்று, தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். இந்த வளர்ச்சியே அரசியல் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனால் கட்சியை பலவீனப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் தங்களை இழிவுபடுத்த முயன்றவர்கள், தற்போது மேலும் தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: விசிக கட்சி 100% தேர்தல் களத்தில் போட்டியிடாது...! காலையிலேயே திருமாவளவன் பரபரப்பு அறிவிப்பு.!!!
தொண்டர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மாறிவரும் அரசியல் சூழலில் விசிகவினர் மிகவும் எச்சரிக்கையுடனும், அரசியல் முதிர்ச்சியுடனும் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார். கட்சியை குறிவைக்கும் அரசியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள, தொண்டர்கள் பன்மடங்கு உற்சாகத்துடனும் ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலவளவில் திரளாக பங்கேற்க அழைப்பு
தமிழக அரசியல் எவ்வாறு மாறினாலும், விசிக உருவாக்கிய அரசியல் களத்தை வேறு யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஜூன் 30-ஆம் தேதி நடைபெறும் மேலவளவு வீரவணக்க நிகழ்வில் கட்சித் தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், தமிழக அரசியல் கூட்டணிகள் மற்றும் மாற்று அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், வரவிருக்கும் அரசியல் நிகழ்வுகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பாஜக-வில் அடுத்த அதிர்ச்சி.... திடீரென பதவியை ராஜினாமா செய்த பஜாக கூட்டுறவுப் பிரிவு மாநிலத் தலைவர் மகா சுசீந்திரன்..!!!