திமுக என்னிடம் அப்படி மட்டும் தான் கூறியது...! விஜய் அரசுக்கு விசிகதான் அச்சாணி! திருமாவளவன் உடைத்த ரகசியம்..!!!
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடாத முடிவு குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்தார். மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு பாராட்டும் தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடாதது தொடர்பாக எழுந்த விவாதங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். தன்னை தேர்தலில் நிற்க வேண்டாம் என்று திமுக வற்புறுத்தவில்லை என்றும், மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பொறுப்புகள் இருந்ததால் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மட்டுமே கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், தேவையற்ற அரசியல் சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடாமல் இருக்க முடிவு செய்ததாகக் கூறினார். மேலும், 2006ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று பின்னர் அந்த அணியிலிருந்து விலகி, திமுக அரசு நீடிக்க ஆதரவளித்த அரசியல் நிகழ்வையும் நினைவுகூர்ந்தார்.
இதையும் படிங்க: BREAKING : ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் திருமாவளவன்! தவெக அமைச்சரவையில் விசிக...! உற்று நோக்கும் திமுக...அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!!
தவெக அரசுக்கு ஆதரவு குறித்து விளக்கம்
தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளிக்கும் முடிவை, திமுக தலைவர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியிடம் முறைப்படி தெரிவித்த பிறகே எடுத்ததாக திருமாவளவன் கூறினார். தற்போதைய அரசியல் சூழலில் விசிக, தவெக அரசுக்கு ஆதரவளிப்பதோடு மட்டுமல்லாமல் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்க கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். விசிக தான் தவெக அரசு என்ற வண்டி சீராக இயங்குவதற்கான அச்சாணியாக செயல்படுகிறது என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
அண்ணாமலை குறித்து விமர்சனம்
பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகி புதிய இயக்கத்தை தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்க அரசியல் நிகழ்வு என திருமாவளவன் கருத்து தெரிவித்தார். அரசு அதிகாரி ஒருவர் பதவி விலகும்போது பின்பற்றும் நடைமுறையைப் போலவே, பாஜக தலைமையிடம் கடிதம் வழங்கி அனுமதி பெற்ற பிறகே புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாக அவர் விமர்சித்தார்.
மதவாத அரசியல் எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழக மக்கள் அதை அடையாளம் கண்டு நிராகரிப்பார்கள் என்றும், மதச்சார்பின்மையை பாதுகாப்பதில் தனது கட்சி உறுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டுக்கான விசிக விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு ‘தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெறவுள்ளதாகவும் அறிவித்தார்.
மேகதாது விவகாரத்தில் முதல்வருக்கு பாராட்டு
காவிரி நதியின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்ற திருமாவளவன், அதற்காக முதல்வர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்தார். அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது முக்கியமான நிகழ்வாகும் என்றார்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்தார். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்தின் வாழ்வாதார நலன்களை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் அவசியம் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பரபரப்பு.... கூட்டணி மாறினால் ஆட்சி கவிழும்..? குண்டை தூக்கி போட்ட எடப்பாடி! ' பீனிக்ஸ்' பறவை போல் மறுமலர்ச்சி எடுக்கும் அதிமுக..!!!