BREAKING: சற்று முன்....திருமாவளவன் திடீரென பின்வங்கினார்! முடிவை மாற்றியதால் அரசியலில் புதிய பரபரப்பு.!!!
திமுக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கூறிய கருத்தில் இருந்து திருமாவளவன் பின்வாங்கியுள்ளார். விசிக திமுக கூட்டணியிலேயே தொடரும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததாக கூறிய கருத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தற்போது பின்வாங்கியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது முந்தைய பேச்சுக்கு விளக்கமளித்து அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்ட பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.
ஊடகங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்தே அந்த கருத்தை தெரிவித்ததாக கூறிய அவர், “திமுக அல்லது அதிமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: யார் என்ன செய்தாலும்.... விஜய்யை வீழ்த்த முடியாது! ஆதரவு கடிதத்தோடு வந்த ஆதவ் அர்ஜுனா சொன்ன அந்த ஒரு வார்த்தை.! மகிழ்ச்சியில் மக்கள்...!!
“கிசுகிசு தகவல்களை வைத்தே பேசினேன்”
சமீபத்தில் அவர் வெளியிட்ட கருத்துகள் தமிழக அரசியலில் கூட்டணி மாற்றம் குறித்த விவாதத்தை கிளப்பியிருந்தன. குறிப்பாக, விசிக திமுக கூட்டணியில் இருந்து விலகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அதற்கு நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
தகவலின்படி, “ஊடகங்களில் வந்த கிசுகிசு தகவல்களை வைத்தே நான் அவ்வாறு கூறினேன். எந்தக் கட்சியுடனும் நேரடி பேச்சுவார்த்தை நடந்ததில்லை” என்று அவர் தெரிவித்தார்.
தவெக அரசுக்கு ஆதரவு ஏன்?
மேலும், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திலேயே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததாகவும் திருமாவளவன் கூறினார். அது அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையிலான முடிவு என்றும் அவர் விளக்கமளித்தார்.
இதையடுத்து, விசிக தற்போதும் திமுக கூட்டணியிலேயே தொடர்கிறது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த விளக்கம் கூட்டணி அரசியல் குறித்த கடந்த சில நாட்களாக நிலவிய குழப்பங்களுக்கு பதிலாக பார்க்கப்படுகிறது.