×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING : விஜய் முதல்வர் ஆனதில் எனக்கு பொறாமையா.... அப்படி ஒரு தரம்கெட்ட ஆள் இல்லை! திமுக - அதிமுக கூட்டணி... தேர்தலில் தோற்பின் மு.க ஸ்டாலினை சந்தித்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த ரஜினிகாந்த் ..!!!

விஜய் முதலமைச்சரானது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தன்னைச் சுற்றிய சர்ச்சைகளுக்கும் அவர் விளக்கம் அளித்தார்.

Advertisement

தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார். விஜய் முதலமைச்சரானதற்கு தனக்கு எந்த வித பொறாமையும் இல்லை என்றும், அவரது வெற்றி மகிழ்ச்சி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவிய குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியாக பதிலளித்தார்.

விஜய் குறித்து பரவிய விமர்சனங்களுக்கு பதில்

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு, விஜய் முதலமைச்சராக வரக்கூடாது என்பதற்காக ரஜினிகாந்த் முயன்றதாகவும், அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேசினார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுகுறித்து பேசிய ரஜினிகாந்த், “அப்படிப் பேசக்கூடிய தரங்கெட்ட ஆள் இந்த ரஜினிகாந்த் கிடையாது” என்று நேரடியாக மறுத்தார்.

மேலும், “விஜய் முதலமைச்சரானதில் எனக்கு பொறாமை என்று சொல்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட எண்ணமே இல்லை. விஜயின் வெற்றி எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம் தான்” என்று கூறினார். அதேசமயம், நடிகர் கமல் ஹாசன் முதலமைச்சராக இருந்தாலும் கூட தனக்கு பொறாமை வந்திருக்காது என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: BREAKING: பாஜகவில் இருந்து சரத்குமார் விலகலா? திடீர் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்! அரசியல் ஆலோசனை கூட்டத்தை குறித்தும் அதிரடி பதில்!!!

ஸ்டாலினை சந்தித்தது ஏன்?

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது குறித்தும் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். “ஸ்டாலின் என்னுடைய 40 வருட நண்பர். கொளத்தூரில் அவர் தோல்வி அடைந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. நண்பர் என்ற அடிப்படையில்தான் அவரை நேரில் சென்று சந்தித்தேன்” என்றார்.

அதன்பின் இணையதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வந்ததாகவும், அதற்கு பதில் சொல்லாமல் இருந்தால் அது உண்மை என்று ஆகிவிடும் என்பதால்தான் தற்போது விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்

இந்நிலையில், ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் அவரது பெயர் தொடர்ந்து பேசப்பட்டு வரும் சூழலில், இன்றைய இந்த விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: ரஜினிகாந்த் - ஸ்டாலின் சந்திப்பு! அதிமுக - திமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை.... உண்மையை உடைத்த ரியாஸ்.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajinikanth #விஜய் #Tamil Nadu Politics #ரஜினிகாந்த் பேட்டி #TVK
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story