இது எவ்வளவு பெரிய தவறு..! உங்களால இப்போ அவருக்கும் கஷ்டம்... முதல்வர் விஜய்க்கு தாடி பாலாஜி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீதான புகார் விவகாரத்தில் நடிகர் தாடி பாலாஜி கடும் விமர்சனம் முன்வைத்து, முதல்வர் விஜய்க்கு வேட்பாளர் தேர்வு குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் சிக்கி தலைமறைவாகியுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி வெளியிட்ட வீடியோவில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், முதல்வர் விஜய்க்கும் அவர் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
முதல்வருக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்
சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசிய தாடி பாலாஜி, 'இது எவ்வளவு பெரிய தவறு. உங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்த முதலமைச்சருக்கே உங்கள் செயலால் பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டீர்களே' என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சியருக்கே இந்த நிலையா..? MLA அருள் விக்னேஷ்ஷை இறங்கி அடித்த அதிமுக! குமுறிய எடப்பாடி..!!!
முதல்வர் விஜய்யால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு பதவிக்கு வந்தவர்கள் அவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர, இதுபோன்ற பிரச்சினைகளால் பின்னடைவை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் விஜய்க்கு வாக்களித்த கோடிக்கணக்கான மக்களில் தானும் ஒருவர் என்ற உரிமையில் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வரும் தேர்தல்களில் தொகுதி வேட்பாளர்களை மற்றவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு செய்வதை விட, முதல்வர் தனது நேரடி மேற்பார்வையில் நம்பிக்கையான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் தவெக நிர்வாகியின் வீடியோ வைரல்
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் அக்கட்சியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றிய தாடி பாலாஜி, பின்னர் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீதான புகார் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாடி பாலாஜியின் விமர்சன வீடியோவும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் இரட்டைச் சிக்கலில் சிக்கிய முதல்வர் விஜய்! தவெக அரசு தப்பிக்குமா..? அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன..?