ஆட்சியருக்கே இந்த நிலையா..? MLA அருள் விக்னேஷ்ஷை இறங்கி அடித்த அதிமுக! குமுறிய எடப்பாடி..!!!
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், அதிமுக சார்பில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநில தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளிடம் இந்தப் புகார் நேரில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
முக்கிய அதிகாரிகளிடம் அதிமுக நிர்வாகி புகார்
அதிமுக நிர்வாகியும் வழக்கறிஞருமான திரிசூலி, மாநில தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பனையூரில் விஜய் எடுத்த அதிரடி முடிவு! அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை! பரபரக்கும் அரசியல் களம்..!!!
எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே கண்டனம்
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் ஏற்கெனவே கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பற்ற சூழலை ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் உருவாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என்றும், இது நிர்வாகத்தின் சீர்கேட்டைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது அதிமுக சார்பில் உயர் அதிகாரிகளிடம் முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறுஞ்செய்தி தொடர்பான குற்றச்சாட்டு குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகளே உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும்.