×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த ஷாக்... தவெக-வில் இருந்து விலகும் தென்காசி மாவட்டச் செயலாளர்...! திமுகவில் ஐக்கியமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!!!

தென்காசி மாவட்ட தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் ராஜ்பிரகாஷ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் இணைய வாய்ப்பு குறித்தும் பேச்சு.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி மாவட்டச் செயலாளர் ராஜ்பிரகாஷ், கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் மீது எழுந்த புகார்களைத் தொடர்ந்து தலைமை அழைத்து எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த முடிவு தென்காசி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகார்களைத் தொடர்ந்து தலைமை எச்சரிக்கை

ராஜ்பிரகாஷ் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால்,அவர் பனையூருக்கு அழைக்கப்பட்டு கட்சித் தலைமை சார்பில் எச்சரிக்கை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலக அவர் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: இது சரியான டைம் இல்ல..! திடீரென ரூட்டை மாற்றிய திமுக தலைமை..! 6 தொகுதி இடைத்தேர்தலுக்காக ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்..! அறிவாலயத்தில் நடக்கும் அந்த மறைமுக ஆலோசனை..!!!

திமுகவில் இணைய வாய்ப்பு 

கட்சியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ள ராஜ்பிரகாஷ், வாசுதேவநல்லூர் திமுக எம்.எல்.ஏ. ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவர் திமுகவில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ராஜ்பிரகாஷின் அரசியல் முடிவு குறித்த தகவல்கள் தென்காசி மாவட்டத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவர் எந்தக் கட்சியில் இணைவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: இது எவ்வளவு பெரிய தவறு..! உங்களால இப்போ அவருக்கும் கஷ்டம்... முதல்வர் விஜய்க்கு தாடி பாலாஜி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ராஜ்பிரகாஷ் #தென்காசி TVK #தமிழக வெற்றிக் கழகம் #திமுக #TVK ராஜினாமா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story