என்ன நடக்குது இங்க... இது என்ன அரசியலா? இரட்டை அர்த்த பேச்சால் வெடித்த வெடிகுண்டு! உதயநிதியை வருத்தெடுத்த தமிழிசை... அரசியலில் பரபரப்பு..!!!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், உதயநிதி ஸ்டாலின் பேச்சு, டாஸ்மாக் மற்றும் தேர்தல் எஸ்.ஐ.ஆர் குறித்து கடும் விமர்சனம் முன்வைத்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது பேச்சில் இரட்டை அர்த்தங்கள் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், அரசியல் மற்றும் ஆட்சி செயல்பாடுகளை பேசாமல் தனிப்பட்ட விஷயங்களை முன்வைப்பது நாகரிகமான அரசியல் அல்ல என்றும் விமர்சித்தார்.
உதயநிதி பேச்சுக்கு தமிழிசை கண்டனம்
திமுகவின் பிரச்சார பாணி தொடர்ந்து இதேபோன்ற பேச்சுகளால் வெளிப்பட்டு வருவதாக தமிழிசை கூறினார். குறிப்பாக, அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதை விட தனிப்பட்ட ‘Mood’ பற்றி பேசுவது முறையல்ல என்றும், இதுபோன்ற கருத்துகள் அரசியல் விவாதத்தின் தரத்தை குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து தமிழிசை முன்வைத்த இந்த விமர்சனம், திமுக - தவெக இடையிலான அரசியல் மோதல் நீடித்து வரும் சூழலில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாகவும் உதயநிதியின் சில கருத்துகளை தமிழிசை பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.
டாஸ்மாக் விவகாரத்திலும் விமர்சனம்
தொடர்ந்து, தவெக அரசின் மதுவிலக்கு கொள்கை மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் குறித்தும் தமிழிசை கேள்வி எழுப்பினார். 717 மதுக்கடைகள் மூடப்பட்டதாக அரசு கூறும் நிலையில், மறுபுறம் புதிய மதுக்கூடங்கள் திறக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். 717 மதுபானக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.
பெண்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மதுபான விற்பனை விரிவடையக் கூடாது என்றும், டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பான அரசின் கொள்கை தெளிவாக இருக்க வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் SIR நடைமுறை குறித்து கருத்து
தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடைமுறை குறித்தும் தமிழிசை தனது கருத்தை பதிவு செய்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் கள்ள ஓட்டுகளை தடுப்பதில் இதுபோன்ற நடவடிக்கைகள் முக்கியமானவை என அவர் குறிப்பிட்டார். மேலும், SIR நடைமுறை இல்லையென்றால் கள்ள ஓட்டுகள் மூலம் திமுக மீண்டும் வெற்றி பெற்றிருக்கும் என்றும், விஜய் முதலமைச்சராகவும் தவெகவைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவும் ஆகியிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இதனால், SIR நடைமுறை குறித்து தவெக அமைச்சர்கள் தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தினார். அவரது இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா? தவெகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளி...! திருப்பூரில் மாறும் அரசியல் கணக்கு..!!!