யார் சொன்னாலும் ஓட்டு போடாதீங்க... பாமக வின் இந்த ஒரு ட்விஸ்ட்டை முதல்வர் விஜய்யே எதிர்பார்த்து இருக்கமாட்டாரு! தவெகவுக்கு எதிராக துருப்புச்சீட்டான பாமக...!!!
மதுராந்தகம் இடைத்தேர்தலில் வன்னியர் வாக்குகளை குறிவைத்து எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் மறைமுக பிரச்சாரம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக, வன்னியர் சமூக வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப எதிர்க்கட்சிகள் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமக நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் ரகசியமாக இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தவெக வாக்குகளை குறிவைத்து நடக்கும் பிரச்சாரம்
எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள் எதிர்காலத்தில் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அரசியல் பலமாக மாறக்கூடும் என எடுத்துரைக்கப்படுவதாக தெரிகிறது. தவெக வெற்றி பெற்றால், அந்த வெற்றிக்கு பட்டியலின மக்களின் வாக்குகளே முக்கிய காரணம் என சில சமூக அமைப்புகள் உரிமை கோரலாம் என்றும் அவர்கள் கூறி வருவதாக தகவல்.
இதையும் படிங்க: ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க பாதரச பாப்பா..! CM விஜய்க்கு வீடியோ மூலம் தரமான பதிலடி கொடுத்த திமுக...!!!
மேலும், எதிர்காலத்தில் தவெக ஆட்சிக்கு வந்தால், அதன் மூலம் திருமாவளவனின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற கருத்தையும் முன்வைத்து வாக்காளர்களிடம் விளக்கம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், பாமக தலைமை தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கூறினாலும், நீண்ட கால அரசியல் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுவதாக தெரிகிறது.
பிற சமூகங்களிடமும் விரியும் மறைமுக வியூகம்
இந்தப் பிரச்சாரம் வன்னியர் சமூகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை என கூறப்படுகிறது. பட்டியலினத்தவர் அல்லாத பிற சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களிடமும் இதே கருத்தை எதிர்க்கட்சியினர் ரகசியமாக எடுத்துச் சென்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வன்னியர் வாக்குகள் தேர்தல் முடிவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்த சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களை தங்கள் பக்கம் திருப்புவதில் பல்வேறு தரப்பினரும் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிகரிக்கும் அரசியல் பரபரப்பு
தவெக வெற்றியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் முன்னேற்றத்துடன் இணைத்து பேசும் இந்த வியூகம், மதுராந்தகம் தொகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல எதிரொலி இருப்பதாக எதிர்க்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதனால், மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் சமூக வாக்குகளின் நகர்வு மற்றும் கட்சிகளின் பிரச்சார வியூகங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: என்ன பெத்த தாயை அசிங்கமாக பேசியபோது கூட பொறுத்துக்கிட்டேன்! ஆனால்... மேடையில் அதை சொல்லி கலங்கிய CM விஜய்! திமுகவுக்கு உரத்த குரலில் பதிலடி..!!!