உளவுத்துறை கொடுத்த ரகசிய ரிப்போர்ட்...! இடைத்தேர்தல் முடிந்த கையோடு அமைச்சரவையை களையெடுக்கும் முதல்வர் விஜய்! இரவோடு இரவாக வெளியான அதிர்ச்சி தகவல்...!!!
இடைத்தேர்தல் முடிந்ததும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்படலாம்.
இடைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசியலில் அடுத்தகட்ட மாற்றங்கள் குறித்த பரபரப்பு தொடங்கியுள்ளது. அடுத்த வாரம் தமிழக அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உளவுத்துறை அளித்ததாக கூறப்படும் ரகசிய அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுமா?
அரசின் செயல்பாடுகள் மற்றும் துறை ரீதியான பணிகளை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக செயல்படாத சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல். குறிப்பாக, ஒரு பெண் அமைச்சரின் பதவி பறிக்கப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்...! 3 அமைச்சர்களை சுழற்றி அடிக்கும் CM விஜய்...! அமைச்சரவையில் உள்ளே வரும் அந்த ஒரு முக்கிய புள்ளி...!!!
இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு புதிய முகம்?
இதனிடையே, இடைத்தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் மரகதம் குமரவேலுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம் என்ற பேச்சும் வலுத்துள்ளது. அவரது தேர்தல் செயல்பாடுகள் மற்றும் கட்சிக்கான பங்களிப்பை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அடுத்த வாரம் வெளியாகுமா முக்கிய அறிவிப்பு?
இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான முடிவுகள் அடுத்த வாரத்தில் தெளிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் பதவியில் நீடிப்பார்கள், யாருடைய இலாகாக்கள் மாற்றப்படும், புதியதாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதே தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக உள்ளது. அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும் வரை, தற்போதைய தகவல்கள் அனைத்தும் அரசியல் வட்டாரத் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.