×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

4 அமைச்சர்களின் பதவி பறிப்பு....! முதல்வர் விஜய்யின் கறாரான முடிவால் அலறும் கோட்டை வட்டாரம்...!!!

தமிழக அமைச்சரவையில் நான்கு அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோஷ்டி பூசல், சர்ச்சைகள் காரணமாக அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழக அமைச்சரவையில் நான்கு அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோஷ்டி பூசல், சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறனின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைகளில் சிக்கிய சமூக நலத்துறை அமைச்சர்

பதவியை இழக்க உள்ள நான்கு அமைச்சர்களில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, நிகழ்ச்சி மேடையில் ஃப்ளெக்ஸ் போர்டில் தனது பெயர் முதன்மையாக இடம்பெறாதது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின், தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: லிஸ்ட் ரெடி.... 6 அமைச்சர்களின் பதவி பறிப்பு? CM விஜய் எடுக்கப்போகும் அதிரடி ஆக்க்ஷன்...! கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்!!!

மேலும், சட்டசபையில் அவர் பேசியபோது தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சுத் திறன் தொடர்பாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அமைச்சர் பதவி பறிப்பு நடவடிக்கையில் ஜெகதீஸ்வரி முதலில் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்க போட்டி

நான்கு அமைச்சர்களின் பதவி பறிப்பு மற்றும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், புதிய அமைச்சரவையில் இடம்பெற பலர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, விஜய் ரசிகர் மன்ற காலத்திலிருந்தே அவருடன் பயணித்து, தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும்போது அனுபவத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், நிர்வாகத் திறமை மற்றும் கட்சியின் பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத செயல்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING: 3 அமைச்சர்கள் பதவி நீக்கம்? இவர்களுக்கு எல்லாம் முக்கிய பதவி! அமைச்சரவையில் அதிரடி காட்டின CM விஜய்! கசிந்த தகவல்....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தமிழக அமைச்சரவை #Cabinet Reshuffle #விஜய் #ஜெகதீஸ்வரி #அமைச்சர் பதவி பறிப்பு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story