BREAKING: 3 அமைச்சர்கள் பதவி நீக்கம்? இவர்களுக்கு எல்லாம் முக்கிய பதவி! அமைச்சரவையில் அதிரடி காட்டின CM விஜய்! கசிந்த தகவல்....!!!
அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, ஆர்.குமார், வி.கே.ராஜீவ் பதவி நீக்கம், சில அமைச்சர்களின் இலாகா மாற்றம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, ஆர்.குமார், வி.கே.ராஜீவ் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், கீர்த்தனா, ராஜ்மோகன், தமிழன் பார்த்திபன் ஆகியோரின் இலாகாக்களும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. ஆதவ் மற்றும் செங்கோட்டையனுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்?
ஆட்சி நிர்வாகத்தை மேலும் சீரமைக்கும் வகையிலும், கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலும் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் வியூகத்தை மாற்றியமைப்பதற்காகவும் இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படலாம்.
இதையும் படிங்க: உங்க ஆட்டத்தை அடக்குறேன்! உளவுத்துறை அறிக்கையால் அதிர்ச்சியில் CM விஜய்! தவெக- வில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்...!!!
புதிய பொறுப்புகள் யாருக்கு?
கீர்த்தனா, ராஜ்மோகன், தமிழன் பார்த்திபன் ஆகியோரின் தற்போதைய இலாகாக்களில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில், ஆதவ் மற்றும் செங்கோட்டையனுக்கு புதிய துறைகள் ஒதுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அடுத்தகட்ட நகர்வுகள் மீது கவனம்
ஊகங்கள் உண்மையாகும் பட்சத்தில், புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களின் செயல்பாடுகள் அரசின் நிர்வாகத்தில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்கப்படும். அதே நேரத்தில், பதவி அல்லது இலாகாவை இழக்கும் மூத்த நிர்வாகிகளின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளும் கட்சிக்குள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால், Cabinet Reshuffle தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவை அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன.