அவையில் நடந்த அரசியல் மோதல்! உங்க அப்பாகிட்ட கேட்டுப்பாருங்க... நான் பழைய கதையை சொல்ல ஆரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல...! அதிரடி எச்சரிக்கை விடுத்த ஆதவ் அர்ஜூனா..!!!
சட்டமன்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து திமுக, தவெக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆதவ் அர்ஜூனா ஆவேசமாக பேசினார்.
சட்டமன்ற மானியக்கோரிக்கை விவாதத்தின்போது சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேற்கு வங்கம், பீகாரில் குறுகிய காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வாக்குவாதம்
மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் 3 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட ஆதவ் அர்ஜூனா, மத்திய அரசை காரணம் காட்டி தமிழக அரசு தப்பிக்கக் கூடாது என விமர்சித்தார். இதனால் அவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இதற்கு பதிலளித்து திமுக எம்.எல்.ஏ. ஒருவர் பேசியபோது, அவரது கருத்துக்கு தவெக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஏற்பட்ட அமளியை அடுத்து, அந்தப் பேச்சின் ஒரு பகுதி அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
பழைய கதைகளை சொல்ல ஆரம்பித்தால்...
இதன் பின்னர் மீண்டும் பேசிய ஆதவ் அர்ஜூனா, திமுகவை நோக்கி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை திமுகவுக்கு உண்மையாகப் பணியாற்றியதாகக் கூறிய அவர், அது திமுக தலைவர் மற்றும் அவரது தந்தைக்கு தெரியும் என குறிப்பிட்டார்.
மேலும், “நான் பழைய கதைகளைச் சொல்ல ஆரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல” என திமுக உறுப்பினர்களை நோக்கி ஆவேசமாக எச்சரிக்கை விடுத்தார். இதனால் சட்டப்பேரவையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
அவையில் அதிகரித்த அரசியல் மோதல்
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை மையமாகக் கொண்டு திமுக அரசுக்கும் தவெகவுக்கும் இடையிலான அரசியல் மோதல் சட்டப்பேரவையிலும் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு அவை நடவடிக்கைகளில் கவனம் பெற்ற நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: திமுக- வின் தீர்மானமான முடிவு இதுதான்... முதல் கட்டத்திலேயே விஜய்க்கு ஆப்பு.! தமிழக அரசியலில் பரபரப்பு..!!!