CM விஜய்யின் கரூர் பயணத்திற்கு செக் வைத்த திமுக....! இன்று நடக்கப்போகும் கிளைமேக்ஸ் சீன்... தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு.!!!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜயின் ஜூலை 10 கரூர் பயணத்திற்கு தடை கோரி திமுக தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் ஜூலை 10-ம் தேதி மேற்கொள்ள உள்ள கரூர் பயணத்திற்கு தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கரூர் பயணத்தை எதிர்த்து திமுக மனு
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், ஜூலை 10-ம் தேதி கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: BREAKING: திடீர் திருப்பம்! விஜய்யின் மாஸ்டர் பிளான்! டெல்லி பயணத்தில் அதிகரிக்கும் பரபரப்பு!!!
சிபிஐ விசாரணை பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சமீபத்திய பேச்சுகள் சாட்சிகளையும் ஆதாரங்களையும் பாதிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, அவர் மீது உரிய வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை நிறைவடையும் வரை முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
மேலும், கரூர் பயணம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் சிபிஐ விசாரணை மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன் சிபிஐயின் அனுமதி பெறுவது தொடர்பாக வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பு வலியுறுத்தியுள்ளது. மூத்த வழக்கறிஞர் ஹுஸேபா அகமதி முன்வைத்த அவசர முறையீட்டைத் தொடர்ந்து, இந்த வழக்கு இன்று நீதிபதிகள் விஸ்வநாதன் மற்றும் ஆலோக் ஆராதே அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின் முடிவைத் தொடர்ந்து முதல்வர் விஜயின் கரூர் பயணம் தொடர்பான நிலை தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.