BREAKING: சற்று முன்... டெல்லியில் பரபரப்பு! விஜய் அளிக்கும் பதில்கள் அடிப்படையில்.... சிபிஐ வழக்கு குற்றப்பத்திரிக்கை! அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு!
கரூர் தவெக மாநாட்டு நெரிசல் வழக்கில் நடிகர் விஜய்க்கு மீண்டும் சம்மன். சிபிஐ விசாரணை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் தவெக மாநாட்டு விபத்து தொடர்பான விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடிகர் விஜய் மீண்டும் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் வந்திருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கரூர் மாநாட்டு நெரிசல் விவரம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார மாநாட்டின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
டெல்லியில் விஜயின் விளக்கம்
இந்த வழக்கின் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 12-ம் தேதி நடிகர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராகி சுமார் ஏழு மணி நேரம் விளக்கம் அளித்தார். அன்றைய தினம் விசாரணை முழுமையடையாத நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவருக்கு தற்காலிக விலக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: BREAKING: திடீர் திருப்பம்! விஜய்யின் மாஸ்டர் பிளான்! டெல்லி பயணத்தில் அதிகரிக்கும் பரபரப்பு!!!
மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ
இந்நிலையில், இன்று (ஜனவரி 19) மீண்டும் விசாரணைக்கு வருமாறு சிபிஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது. மாநாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மக்கள் திரண்டதும், விஜயின் வருகையில் ஏற்பட்ட ஏழு மணி நேர தாமதமும் நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக சிபிஐ விசாரணை தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படுமா?
இந்த விசாரணையின் முடிவில் சம்பவத்திற்கு பொறுப்பானவர்களின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. தவெக நிர்வாகிகள் ஏற்கனவே இதில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக விஜய் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அவரது பெயரும் சேர்க்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படும் விஜய்க்கு இது ஒரு முக்கியமான சட்டப் போராட்டமாக மாறும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: இரவில் தவெக தலைவர் விஜய்க்கு வந்த அதிர்ச்சி செய்தி! 6 முதல் 7 மணி நேரம்....தமிழக அரசியலில் ஒரே பரபரப்பு!