×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எடப்பாடிக்கு " நான் மட்டும் எல்லாம் " என்ற எண்ணம்! எல்லாரையும் போங்க போங்கன்னு விரட்டாதீங்க! ஒரு டைம் வாங்கன்னு கூப்பிடுங்க பாருங்க! எடப்பாடிக்கு பதிலடி கொடுத்து எஸ்.பி வேலுமணி வெளியிட்ட அறிக்கை!!!

அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு எஸ்.பி.வேலுமணி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய அறிக்கைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார். “தனி ஆதிக்கத்தை விடுத்து அனைவரையும் அரவணைத்து சென்றால்தான் கட்சி வலுப்படும்” என்று அவர் வெளியிட்டுள்ள பதிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மற்றொரு அணியாகவும் செயல்படுவதாக தகவல்கள் பரவி வந்தன.

இதையும் படிங்க: BREAKING: அதிமுக தலைமையில் அதிர்ச்சி.... எஸ்.பி.வேலுமணி, சி. வி.சண்முகம் உட்பட6 MLA-க்கள் திடீர் மாயம்..? அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...!!!

எடப்பாடி அறிக்கைக்கு வேலுமணி பதிலடி

நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை தொண்டர்கள் முறியடிக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக சிலரை விமர்சித்திருந்தார். இதையடுத்து இன்று சமூக வலைதளத்தில் நீண்ட பதிவு வெளியிட்ட வேலுமணி, அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

அந்த பதிவில், “உங்கள் பிரசார உழைப்பை யாரும் மறுக்கவில்லை. ஆனால் கூட்டணி மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் யாரிடமும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டன. தம்பிகளாக நாங்கள் அதையும் ஏற்றுக்கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘நான் மட்டுமே எல்லாம்’ என்ற எண்ணம் கூடாது

தேர்தல் தோல்விக்குப் பிறகு தலைமை தரப்பில் இருந்து உரிய கலந்துரையாடல் நடக்கவில்லை என்றும் வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார். “தோல்விக்குப் பிறகும் ‘நான் மட்டுமே எல்லாம்’ என்ற மனநிலையுடன் பேசுவதை உணர்வுள்ள தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது மக்கள் தீர்ப்பை மதித்த அரசியல் முடிவு என்றும், அதில் கட்சியைப் பிரிக்கும் நோக்கம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

‘ஒருமுறை வாங்க வாங்க என்று அழையுங்கள்’

கட்சியின் எதிர்காலத்தை அனைவரும் இணைந்து தீர்மானிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு, இறுதியாக வேலுமணி உருக்கமான வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

“எந்தத் தியாகமும் செய்யத் தயார் என்று சொல்லும் நீங்கள், இப்போதாவது எங்களை அழைத்து பேச தயாரா? எப்போதும் போல ‘போங்க போங்க’ என்று சொல்லாமல், ஒருமுறை ‘வாங்க வாங்க’ என்று அழைத்துப் பாருங்கள். எல்லாமே மாறும். கட்சி நல்லா இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

வேலுமணியின் இந்த அறிக்கை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பல முக்கிய நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், கட்சிக்குள் புதிய அரசியல் திருப்பம் உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இதையும் படிங்க: பதவி ஆசை எடப்பாடிக்கு பழினிச்சாமி கண்ணை பறித்துவிட்டது! உயிர் இருக்கும்வரை எதிர்ப்போம்.... சி.வி. சண்முகத்தின் அதிரடி சபதம்! சென்னையில் பரபரப்பு பேட்டி!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#eps #sp velumani #அதிமுக #Edappadi Palaniswami #AIADMK News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story