×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஷாக் ரிப்போர்ட்... 80,000 வாக்குகள் அவுட்..! 10-க்கு 10 அடித்து தூள் கிளம்பும் தவெக...! பரபரப்பில் தமிழக அரசியல் களம்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கும் SIR வாக்காளர் நீக்கத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியை தொகுதி வாரியான தரவுகள் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளது.

Advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிதாக களம் கண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கும், தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தமான SIR நடவடிக்கைக்கும் இடையிலான தொடர்பு குறித்து புதிய தரவுப்பகுப்பாய்வு கவனம் பெற்றுள்ளது. சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

குறைந்த நீக்கத்தில் திமுக முன்னிலை

‘தி இந்து பிசினஸ்லைன்’ வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வாக்காளர் நீக்கம் குறைவாக நடைபெற்ற தொகுதிகளில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 10,000-க்கும் குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்ட 19 தொகுதிகளில் திமுக 7 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், தவெக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதையும் படிங்க: முக்கிய பதவி வாங்கிதருவதாக புகைப்படத்தை காட்டி மிரட்டல்! லீக்கான பகீர் ஆடியோ... தவெக விஜய் மோகன் வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பம்..!!!

நீக்கம் அதிகரிக்க... தவெக வெற்றியும் உயர்வு

வாக்காளர் நீக்கத்தின் அளவு அதிகரித்தபோது தவெக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் உயர்ந்ததாக தரவுகள் காட்டுகின்றன. 10,000 முதல் 20,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 80 தொகுதிகளில் தவெக 22 இடங்களை வென்றுள்ளது. 20,000 முதல் 30,000 வரை நீக்கம் நடைபெற்ற 66 தொகுதிகளில் 32 இடங்களையும் அக்கட்சி கைப்பற்றியுள்ளது.

அதேபோல், 30,000 முதல் 50,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 37 தொகுதிகளில் 24 இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது. 50,000 முதல் 80,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 22 தொகுதிகளில் 18 இடங்களை அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது.

80 ஆயிரத்துக்கும் மேல் நீக்கம்: முழுமையாக தவெக வெற்றி

மிக அதிகமாக 80,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஒட்டுமொத்தமாக 30,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட 69 தொகுதிகளில் 52 இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SIR நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகவும், திமுகவுக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டதே தேர்தல் பின்னடைவுக்கு முக்கியக் காரணம் என்றும் திமுக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் அளவும் தேர்தல் முடிவுகளும் தொடர்புடையதா என்ற விவாதம் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: என்ன நடக்குது இங்க... இது என்ன அரசியலா? இரட்டை அர்த்த பேச்சால் வெடித்த வெடிகுண்டு! உதயநிதியை வருத்தெடுத்த தமிழிசை... அரசியலில் பரபரப்பு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#SIR வாக்காளர் நீக்கம் #தவெக TVK #தமிழக தேர்தல் 2026 #திமுக DMK #வாக்காளர் பட்டியல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story