BREAKING : அதிமுக- வுக்கு அடுத்த அதிர்ச்சி! தவெகவில் இணையும் செம்மலை? ஆட்டம் காணும் கொங்கு மண்டலம்...!!!
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தாராபுரம் நிகழ்ச்சியில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொங்கு அரசியலில் கவனம்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செம்மலை, இன்று தாராபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. செம்மலையின் அரசியல் அனுபவம் காரணமாக, அவரது அடுத்தகட்ட நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகிய செம்மலை
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்த நிலையில், செம்மலை கடந்த மே மாதம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து அவரது அடுத்த அரசியல் பயணம் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இதையும் படிங்க: நேரடியாக இடைத்தேர்தல் களத்தில் குதித்த ஸ்டாலின்...! அண்ணா அறிவாலயத்தில் அவசர ஆலோசனை கூட்டம்... தவெக-வை வீழ்த்த வெறி ஆட்டம் ஆடப்போகும் திமுக..!!!
செங்கோட்டையன் ஏற்பாட்டில் இணைப்பு?
தற்போதைய தகவலின்படி, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் ஏற்பாட்டின் பேரிலேயே செம்மலை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தாராபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் தவெகவின் கவனம்
செம்மலை இணைந்தால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களில் தவெகவில் இணையும் 5-வது முன்னாள் அமைச்சர் என்ற நிலை உருவாகும். அடுத்தடுத்து மூத்த அரசியல் தலைவர்கள் அக்கட்சியில் இணைந்து வருவது, கொங்கு மண்டலத்தில் அதன் அமைப்பு மற்றும் அரசியல் செயல்பாடுகள் குறித்து கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி விரிவாக்கப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், செம்மலையின் இணைப்பு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.