×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எடப்பாடிக்கு சொந்த ஊரிலே வைத்த ஆப்பு...! தவெகவுக்கு மாறும் 1000 அதிமுக நிர்வாகிகள்.! செம்மலையின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு..!!!

சேலத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலையின் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சேலம் மாவட்டத்தில் அதிமுகவுக்கு புதிய அரசியல் சவால் உருவாகும் வகையில் ஒரு முக்கிய நகர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செம்மலையின் ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் விரைவில் கட்சியில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதரவாளர்களுடன் தவெகவுக்கு செல்லும் செம்மலை?

சேலம் மாவட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமாக இருப்பதால், அங்கு இந்த அரசியல் நகர்வு கூடுதல் கவனம் பெற்றுள்ளது. தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கில் செம்மலை இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் கட்சி மாறினால், அது சேலம் மாவட்ட அதிமுக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செம்மலை! அதிமுக அரசியலில் பரபரப்பு...!!!

குறிப்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த அணியில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சொந்த மாவட்டத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு புதிய அரசியல் சவால் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக தரப்பு சொல்வது என்ன?

அதே நேரத்தில், செம்மலையின் நகர்வை அதிமுக நிர்வாகிகள் வேறு கோணத்தில் பார்க்கின்றனர். அவருக்கு களத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆதரவு வட்டம் இல்லை என்றும், இந்த விலகல் கட்சிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தனது அரசியல் வாரிசாகக் கருதப்படும் மகன் எழில் அமுதனின் எதிர்கால அரசியல் வாய்ப்புகளை கருத்தில் கொண்டே செம்மலை தவெகவுடன் இணையும் முடிவை எடுத்துள்ளதாகவும் அதிமுக தரப்பினர் கூறுகின்றனர். இரு தரப்பிலும் மாறுபட்ட கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், செம்மலையின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் சேலம் மாவட்டத்தில் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING : அதிமுக- வுக்கு அடுத்த அதிர்ச்சி! தவெகவில்  இணையும் செம்மலை? ஆட்டம் காணும் கொங்கு மண்டலம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#செம்மலை #அதிமுக #தவெக #Edappadi Palaniswami #vijay tvk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story