×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கஜானா காலி... ஆனால் அதுக்கு மட்டும் பெரும் தொகை இருக்கா? மக்கள் பிரச்சினையை தீர்க்காமல் ஆட்சி நடத்த முடியாது...! முதல்வர் விஜய்க்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை!

மக்கள் பிரச்சினையை தீர்க்காமல் ஆட்சி நடத்த முடியாது! முதல்வர் விஜய்க்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை!

Advertisement

அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தற்போதைய அரசு கவனம் செலுத்தவில்லை என்றும், இதே நிலை நீடித்தால் த.வெ.க. ஆட்சி ஓராண்டு கூட நீடிக்காது என்றும் விமர்சித்தார்.

அவர் பேசுகையில், தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு, பொறுப்பேற்று நான்கு மாதங்கள் கடந்தும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். மின்தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த நிதி இல்லை எனக் கூறும் அரசு, புதிய சட்டமன்ற வளாகம் கட்டுவதற்கு பெரும் தொகையை செலவிடுவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தற்போதைய அரசு தனது சாதனைகளாகக் கூறி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

இதையும் படிங்க: “கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம்!”.. புதிய தலைமைச் செயலக திட்டத்துக்கு சீமான் எச்சரிக்கை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பாஸ்கள் வழங்கப்படாததால் பக்தர்கள் குழப்பத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக முதல்வர் விஜய் வெளிநாட்டுப் பயணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

முதல்வர் விஜய் ஜோதிடர்களை நம்பிச் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார். மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் அரசு செயல்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டிய அவர், தற்போதைய த.வெ.க. ஆட்சி ஓராண்டு கூட நீடிக்காது எனக் கூறினார்.

இதையும் படிங்க: ப்யூஸ் போன தவெக அரசு.. மின்வெட்டு விவகாரத்தில் அரசை விளாசிய உதயநிதி!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK govt #TVK Vijay #sellur raju #Admk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story