×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கட்சியை விட்டு வெளியேறி காரணமே இதுதான்...! எடப்பாடி சொன்ன அந்த வார்த்தைக்கு பதிலடி கொடுத்த தவெக சத்தியபாமா..!!!

திமுக-அதிமுக இடையிலான ரகசிய கூட்டணி குறித்த தகவல்கள் தொடர்பாக தவெக தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா கூறிய கருத்துகள் அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளன.

Advertisement

திமுக - அதிமுக இடையே ரகசிய கூட்டணி அல்லது உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன. இந்த நிலையில், தாராபுரம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

அதிமுகவில் இருந்து வெளியேற காரணம் என்ன?

எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சி மாறியதாக விமர்சிப்பதாக குறிப்பிட்ட சத்தியபாமா, அதிமுகவில் தான் சந்தித்த கடுமையான அநீதிகளும் கொடுமைகளுமே அக்கட்சியிலிருந்து வெளியேறியதற்கான முக்கிய காரணம் என்று தெரிவித்தார். கையெழுத்திட்ட மை காய்வதற்குள் கட்சி மாறிவிட்டதாக கூறப்படும் விமர்சனத்துக்கும் அவர் இதன்மூலம் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! இன்னும் 2 மாதத்தில் எடப்பாடி தான் முதல்வர்...! கொளத்தூருக்கு இடைத்தேர்தல் வரும்.... மாஃபா பாண்டியராஜன் போட்ட வெடிகுண்டுடால் அரசியலில் பரபரப்பு..!!!

திமுக - அதிமுக உடன்பாட்டுக்கு எதிர்ப்பு

மேலும், கொள்கை முரண்பாடுகளை புறந்தள்ளிவிட்டு திமுகவும் அதிமுகவும் கூட்டணி அல்லது உடன்பாடு மேற்கொண்டால், அதை உண்மையான அதிமுக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என சத்தியபாமா கூறினார். இதுபோன்ற அரசியல் நகர்வுகள் கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக இருக்கும் என்றும் அவர் தனது கருத்தை பதிவு செய்தார்.

தாராபுரத்தில் தீவிரமடையும் தேர்தல் களம்

தாராபுரம் (தனி) தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. முன்னதாக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக சார்பில் தற்போது களமிறங்கியுள்ளார். இதனால் தாராபுரம் தொகுதியில் அதிமுக - தவெக இடையிலான அரசியல் மோதலும் கவனம் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் எப்படி கைநழுவியது...! பச்சை வேஷ்டி அணிந்து கையில் கயிறு கட்டிக்கொண்டு... ஆனா கடைசியில்? எடப்பாடி தொகுதியில் நடந்த பேரதிர்ச்சி! உண்மையை போட்டு உடைத்த செங்கோட்டையன்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சத்தியபாமா #TVK Dharapuram #திமுக அதிமுக கூட்டணி #Edappadi Palaniswami #தவெக வேட்பாளர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story