அதிமுகவின் முக்கிய புள்ளி விலகல்! அடுத்தக்கட்டமாக தவெகவில் இணைவா...! கசிந்த தகவல்...!!!
அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் எஸ். செம்மலை விலகியுள்ளார். உட்கட்சிப் பிரச்சினைகள் காரணம் என கூறிய அவர், தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ். செம்மலை அக்கட்சியிலிருந்து விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தற்போதைய தலைமையின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, கட்சியின் தற்போதைய நிலை குறித்து அவர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார்.
“தாயற்ற பிள்ளை போல கழகம் தவிக்கிறது”
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக செம்மலை கூறினார். மேலும், “தற்போது கழகம் தாயற்ற பிள்ளை போல் தவிக்கிறது” என்று வேதனையுடன் பேசியது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
கட்சிக்குள் நீண்ட நாட்களாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தவெக கட்சியிலிருந்து விலகும் முக்கியப்புள்ளி....? இனி விஜய் போட்ட ஒட்டு மொத்த பிளானும் என்னா ஆக போது.....அதிர்ச்சியில் விஜய்!
தவெகவில் இணைய வாய்ப்பா?
அதிமுகவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் செம்மலை விரைவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவின் முக்கிய நிர்வாகியான KAS மூலமாக விஜய்யுடன் ஆலோசனை நடைபெற்றதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து பேசிய செம்மலை, தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து “காலம்தான் முடிவு செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், சேலம் அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: மாஸ் காட்டும் தவெக! ரகசிய கூட்டணி பேச்சால் 5,000 ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய கிளம்பிய அதிமுக புள்ளி.!!!