×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: மாஸ் காட்டும் தவெக! ரகசிய கூட்டணி பேச்சால் 5,000 ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய கிளம்பிய அதிமுக புள்ளி.!!!

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, 5,000 ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சுமார் 5,000 ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஓபிஎஸ் அணி சமீபகாலமாக திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாக குற்றம்சாட்டினார். அந்த அரசியல் போக்கு தான் தன்னை அதிருப்திக்குள்ளாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உருவாகும் மெகா கூட்டணி! விஜய்யுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன், ஓபிஎஸ்.. ரகசியமாக முடிந்த பேச்சுவார்த்தை! அதிர்ச்சியில் அல்லல்ப்படும் திமுக, அதிமுக!

“ரகசிய கூட்டணி” குறித்த பேச்சு அதிர்ச்சி

தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக இடையே ரகசிய கூட்டணி அமையலாம் என்ற தகவல்கள் வெளியாகியதாகவும், அது தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதாகவும், அதன் பின்னரே தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அரசியல் மாற்றத்திற்காக புதிய முடிவு

தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த அரசியல் முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விரைவில் தனது ஆதரவாளர்களுடன் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, குறிப்பாக ஓபிஎஸ் அணிக்குள் புதிய அரசியல் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விஜய்யின் தவெக கட்சிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவு அதிகரித்து வருகிறதா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி.... அதிமுகவுடன் கூட்டணியில் இணையும் தவெக விஜய்! 50 முதல் 60 தொகுதிகள்... புஸ்ஸி ஆனந்த் கூட்டத்தில் கசிந்த ரகசியம்! அரசியலில் பெரும் பரபரப்பு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK #Kolathur Krishnamoorthy #Ops team #Tamil Nadu Politics #vijay party
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story